சமீபத்திய பதிவுகள்

குரானை குப்பையில் போட்ட இஸ்லாமிய அரசாங்கம்

>> Thursday, February 7, 2008

இஸ்லாம் விளையாட்டல்ல! விருப்பமிருந்தால் இருப்பதற்கும் இல்லையானால் வெளியேறுவதற்கும்.

எகிப்து நீதி மன்றம் அறிவிப்பு: "இஸ்லாம் மதத்தில் கட்டாயமில்லை" என்பதற்கு "நீங்கள் இஸ்லாமை விட்டு வெளியேறலாம் என்று பொருள் அல்ல!" இஸ்லாம் ஒரு ஜோக் அல்ல.


ஒரு முன்னால் முஸ்லீம் "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்ற ஏமாற்று வேலையை உலகிற்கு தெரியப்படுத்தினார். எகிப்து அரசு ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை கோட்பாட்டை பின்பற்றவில்லை என்பதை வெளிபடுத்தினார்.

அல் அரேபியா (சௌதி தொலைக்காட்சி http://www.alarabiya.net/articles/2008/01/26/44732.html ) மற்றும் அல் அஹ்ரம்(எகிப்து அரசின் தினப்பத்திரிக்கை http://www.ahram-eg.com/Index.asp?CurFN=egyp4.htm&DID=9477)

ஜனவரி 30, 2008


Translated from Arabic and comments by ibn Misr, edited by John Campbell



எகிப்து நீதிமன்றம் குர்‍ஆன் 2:256ம் வசனத்தை "இஸ்லாமில் கட்டாயமில்லை என்று சொல்லும் வசனத்தை" குப்பையில் போட்டுவிட்டது.

கெய்ரோ, எகிப்து: ஒரு எகிப்து நீதிமன்றம், ஒரு முன்னால் முஸ்லீமின் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. அந்த முன்னால் முஸ்லீம் கிறிஸ்தவத்திற்கு மாறியிருந்தார், மட்டும் தன் அடையாள அட்டையில் தன் பெயரை மாற்றவேண்டும், மற்றும் அதில் தன் மதம் கிறிஸ்தம் என்று எழுதவேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எகிப்து நீதி மன்றத்தின் தீர்ப்பு: ஒரு முஸ்லீம் தன் மதத்தை மாற்றிக்கொள்ள அனுமதி கிடையாது.


இந்த தீர்ப்பை விவரிக்கும் போது, நீதிபதிகள் சொன்னதாவது, "நாங்கள் வானத்தில் உள்ள நீதிமன்றத்தால் நல்ல அறிவுரைகளை பெறுகிறோம். இறைவன் வெளிப்படுத்திய மூன்று மதங்களின் வரிசைகளை நாங்கள் மதிக்கின்றோம், அதாவது, யூத மதம், கிறிஸ்தவ மதம், மற்றும் கடைசி மதமாகிய இஸ்லாமிய மதம் என்பது இந்த வரிசையில் உள்ள மதங்களாகும். இந்த வானத்திலிருந்து வந்த தீர்ப்புப்படி, யூதர்களும், கிறிஸ்தவர்களும் கடைசியாக வெளியாக்கப்பட்ட நல்ல‌ மதமாகிய இஸ்லாமுக்கு மாறலாம். ஆனால், இஸ்லாம் மதத்திலிருந்து யூதமதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மாறக்கூடாது.


நீதிபதிகள் தொடர்ந்து வெளிப்படையாக‌ "முஹம்மத் ஹெகாசி அவரது மனைவிக்கும், மற்றும் அவர்கள் வழக்கறிஞருக்கும் " எச்சரிக்கையை விடுத்தார்கள். எதிர் அலைகளுக்கு விரோதமாக போனால், எகிப்து சமுதாயத்தில் நிம்மதியின்மையையும், பல பிரச்சனைகளையும் சந்திக்கவேண்டிவரும் என்று எச்சரித்தார்கள். (உண்மையில் இந்த எச்சரிக்கை ஹகாசிக்கும், அவரது மனைவிக்கும் மற்றும் பொதுவாக எல்லா கிறிஸ்தவர்களுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)


அந்த நீதிபதிகள் குழு தங்கள் தீர்ப்பை இன்னும் விவரிக்கும் போது, "மத சுதந்திரம் என்பது இஸ்லாமுக்குள் வருவதும்,பிறகு இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்கு போவதும் என்ற பொருள் படாது". இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு மனிதனும் தன் மத பழக்கங்களை(நம்பிக்கையை) சுதந்திரமாக பின்பற்றலாமே ஒழிய, இஸ்லாமோடும், ஷரியா சட்டத்தோடும் விளையாடக்கூடாது.

மேற்கத்திய நாட்டு மக்களுக்கு, மதத்தை மாற்றுவதென்பது அவ்வளவு முக்கியமானது அல்ல, தன் முஸ்லீம் பெயரை தன் அடையாள அட்டையில் மாற்றிக்கொள்வது அவ்வளவு முக்கியமானது அல்ல. மேற்கத்திய அளவுகோலின் படி இவைகள் மிக மிக முக்கியமான விவகாரங்கள் கிடையாது.


ஆனால், எகிப்தில்:

1. நீ சர்சுக்கு போகும் போது பிடிபட்டு, உன் அடையாள அட்டையில் "நீ ஒரு முஸ்லீம்" என்று இருக்குமானால், உன்னை கைது செய்து, உன்னை கேள்விகேட்கவும், கொடுமைப்படுத்தவும் அதிகாரம் உண்டு. பல முன்னால் இஸ்லாமியர்கள் காவலாளிகளின் கைகளிலிருந்து உயிரோடு வீடு திரும்புவதில்லை. இப்படிப்பட்ட கொடுமைக்கு ஆளாகிய சமீபகால நபர், 27 வயது கடந்த ஒரு பெண்மணி, திருமதி ஷெரீன் ஆவார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார், இவர் எகிப்தின் அலேக்சான்டிரியா சார்ந்தவர். இந்த பெண்மணி, காவல் நிலையத்தில் ஜனவரி 30, 2008 அன்று மரித்து போனார். இவரை 5 மணி நேரம் காவல் நிலையத்தில் "கிறிஸ்தவ நம்பிக்கையை விட்டு, இஸ்லாமுக்கு மாறச்சொல்லி, கொடுமைப்படுத்தியதால், இவர் காவல் நிலையத்திலேயே மரித்துவிட்டார்". நீங்கள் இதை படித்துக்கொண்டு இருக்கும் போதே, நூற்றுக்கணக்கான முன்னால் முஸ்லீம்கள் காவலில் வைக்கப்பட்டு இருப்பார்கள் என்பதை அறியுங்கள்.

2. நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பதை உங்கள் அடையாள அட்டையில் காணப்படவில்லையானால், உங்கள் பிள்ளைகள் அனைவரும் தங்கள் பிறப்பு சர்டிபிகட்டில், முஸ்லீம்கள் என்று எழுதப்படுவார்கள். அதன் பிறகு, அவர்கள் இஸ்லாம் முறைப்படி வளர்க்கப்படுவார்கள், இஸ்லாம் பள்ளிக்கூடங்களுக்கு செல்லவேண்டும்.


3. ஒரு எகிப்து முஸ்லீம் தன் திருமணத்தை சர்சில் செய்ய தடை உள்ளது.




4. ஒரு முன்னால் முஸ்லீம் கிறிஸ்தவத்திற்கு மாறிய பிறகு, தன் அடையாள அட்டையில் "முஸ்லீம்" என்ற முத்திரை இருக்கும்பட்சத்தில், அவர் ஒரு கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம். அப்படி செய்துக்கொண்டாலும், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள், இஸ்லாமிய கட்டாய பள்ளிக்கூடங்களுக்கே அனுப்பப்படுவார்கள். பொதுவாக சொல்லப்போனால், ஒரு முஸ்லீம் ஒரு கிறிஸ்தவ அல்லது ஒரு யூத பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம்.(மூஸ்லீம்களை இதை ஒரு பெரிய சாதனை என்று பெருமை அடித்துக்கொள்வார்கள், இஸ்லாமில் பாருங்கள் எப்படி மத சகிப்புத்தன்மை உள்ளதென்று பெருமைப்படுவார்கள்). ஆனால், ஒரு முன்னாள் முஸ்லீம்பெண் ஒரு கிறிஸ்தவ ஆணை திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது, தன் அடையாள அட்டையில் தான் ஒரு முஸ்லீம் என்று இருக்கும் வரை. இப்படி பல ஆயிரக்கணக்கான வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட பெண்களுக்கு இருக்கும் ஒரே வழி, அந்த நாட்டை விட்டு வெளி நாடுகளுக்கு சென்று சந்தோஷமாக வாழவேண்டியது ஒன்று தான்.


5. வேலைக்காக விண்ணப்பம் செய்யவும், அது ஒரு தெரு பெருக்கும் வேலையாக இருந்தாலும் சரி, அல்லது செருப்புக்களுக்கு பாலிஷ் போடும் வேலையாக இருந்தாலும் சரி அப்போது உங்கள் மதத்தை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டு ஆகவேண்டும். ஒரு கிறிஸ்தவராக மாறிய முஸ்லீம், தன் அடையாள அட்டையில் உள்ள இஸ்லாமுக்கு பதிலாக கிறிஸ்தவர் என்று சொல்வதும், தன் நம்பிக்கையை மறுப்பதற்கு சமம். அப்படி அவர் உண்மையைச் சொன்னால், அப்படி சொன்னவனின் இரத்தத்தை அல்லாவிற்கு பலியாக கொடுக்க தயாராக இருக்கவேண்டும்.




சிலர் கேட்கலாம், "பெயரை மாற்றுவது அவ்வளவு முக்கியமானதா?"

முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் பெயர்களால் அடையாளம் காட்டப்படுகிறார்கள். ஒருவேளை ஒருவர் கிறிஸ்தவராக இருந்து, தன் அடையாள அட்டையில் "முஸ்லீம்" என்று இருக்குமானால், அதுவே, அவர் இஸ்லாமை விட்டு சென்று விட்டார் என்று முடிவு செய்யப்பட்டு, அல்லாவிற்காக கொலை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படும்.


ஒரு முன்னாள் முஸ்லீம் தன் அடையாள அட்டையில் தன் மதத்தை முஸ்லீமிலிருந்து கிறிஸ்தவன் என்று மாற்றிவிட்டால். அதாவது அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தாவது, வேறு வகையிலாவது அவன் கிறிஸ்தவன் என்று மாற்றிவிட்டாலும், அப்படி மாற்றிக்கொண்டவன்(ள்), தன் வேலையை விட்டுவிடவேண்டும், தன்னை அறியாத வேறு ஒரு ஊருக்கு சென்று அங்கு தன் விருப்பப்படி சர்சுக்கு போகலாம், அப்போது யாரும் அவரை முன்னாள் முஸ்லீம் என்று கண்டுபிடிக்கமுடியாது, மற்றும் அவரை கைது கூட செய்யமுடியாது.






ஒரு வேளை ஒரு பெற்றோருக்கு குழந்தைகள் இருக்குமானால், பெற்றோர்களில் ஒருவர் கிறிஸ்தவராக மாறினால், இவர்கள் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெறவேண்டும், மட்டும் அவர்கள் பிள்ளைகள் முஸ்லீமாக உள்ள தாயிடமோ, தந்தையிடமோ வாழவேண்டும், முஸ்லீமின் பாதுகாப்பில் அப்பிள்ளைகள் இருக்கவேண்டும். ஒரு வேளை ஒரு கிறிஸ்தவ பெற்றோரில் ஒருவர் முஸ்லீமாக மாறினால், அவர்கள் பிள்ளைகள் முஸ்லீமாக மாறியவரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அவர்களும் முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுவார்கள். இதைத் தான் எகிப்திய சட்டம் இப்படியாக சொல்கிறது "பிள்ளைகள் எந்த பெற்றோர் மிகவும் நல்ல, மற்றும் உயர்ந்த மதத்தை பின்பற்றுகிறாரோ அவரோடு மட்டும் இருக்கவேண்டும்".


ஒரு கிறிஸ்தவராக மாறுகின்ற ஒருவர் தன்னை அல்லாவின் பிள்ளைகள் கொல்லாமல், தன்னை ஒரு மிருகத்தை கொடுமைபடுத்துவது போல கொடுமைபடுத்தாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.


ஷரியா சட்டத்தின் படி, இஸ்லாமிலிருந்து வெளியேறிய ஒருவனை கொல்பவனுக்கு எந்த தண்டனையும் இல்லை. பெரும்பானமையான மேற்கத்தியர்களுக்கு தெரியாத உண்மை என்னவென்றால், ஒரு காபிரை(Christian, Jew, Hindu, Buddhist, or any non Muslim) கொல்லும் ஒரு முஸ்லீமுக்கு இஸ்லாமிய நீதிமன்றம் தண்டனை அளிக்காது. ஏனென்றால், குர்‍ஆன் 98:6ன்படி இந்த காபிர்கள் படைப்பிலேமே மிகவும் மோசமான படைப்புக்கள் ஆகும். வேறு வகையில் சொல்லவேண்டுமானால், இவர்கள் முஸ்லீம்களுக்கு சமமானவர்கள் அல்ல மற்றும் இந்த காபிர்களின் வாழ்வு மதிக்கத்தக்கது அல்ல.




முஹம்மத் ஹகேசி உடைய தந்தை "அபு ஹகேசி" அல் அரேபியா தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில், கீழ் கண்டவாறு சொல்கிறார்.

"நான் என் மகனை சந்திக்கும் போது, அவன் எப்படி கிறிஸ்தவனாக மாறினான் என்பதைப் பற்றி பேசுவேன், மற்றும் இஸ்லாமுக்கு திரும்பு வரும்படி ஒரு வாய்ப்பை தருவேன். ஒருவேளை அவன் மறுத்தால், அவனை உடனே நான் கொன்று விடுவேன்."

மேலும் அவர் சொன்னதாவது "நான் அவனை கொன்றதிற்காக கவலைப்படமாட்டேன், அப்படி அவனை கொன்றதற்காக நான் பெருமைப்படுவேன், அவன் மறுபடியும் இஸ்லாமுக்கு திரும்பு வந்தால், அவனுடைய இந்த கெட்ட நடத்தையை அவன் விட்டுவிட்டால் மற்றும் அவனுக்கு கிறிஸ்தவத்தைப் பற்றி சொல்லியவர்கள் யார் என்று எங்களுக்கு தெரிவித்தால், நான் அவனை மன்னிப்பேன்"


[This is another usual coded veiled threat to Christians in Egypt, by insinuating they are the ones that "force" Muslims to convert.]

http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1738


=============மொழி பெயர்ப்பு முற்று பெற்றது========================

சரியான(உங்களுக்கு சரி என்று படுகின்ற) விடையை தெரிவு செய்க:

1. இந்த கட்டுரையை படித்த பிறகு, நீங்கள் இஸ்லாமைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்:

A) இஸ்லாம் ஒரு அமைதியான மதம்
B) இஸ்லாம் ஒரு அமைதியான மதம் இல்லை
C) இஸ்லாமிய நாடுகளில் உண்மை இஸ்லாமை காணலாம்.
D) இஸ்லாமிய நாடுகளில் உள்ள இஸ்லாம் உண்மையானது அல்ல.
E) இங்கு சொல்லப்பட்ட செய்திகள் பொய், அப்படியெல்லாம் இஸ்லாமிய நாடுகளில் (முக்கியமாக எகிப்தில்) நடப்பதில்லை.
F) A and E
G) B and C


2. இஸ்லாமிய‍ அல்லாத நாடுகளில்(Ex: இந்தியாவில்) சொல்லப்படும் இஸ்லாமுக்கும், இஸ்லாமிய நாடுகளில் பார்க்கும் இஸ்லாமுக்கும், வித்தையாசம் உண்டா?

A) வித்தியாசம் இல்லை, இரண்டும் ஒன்று தான்.
B) வித்தியாசம் உண்டு, இந்தியா போன்ற நாடுகளில் இஸ்லாமிய அறிஞர்கள் பல உண்மைகளை மறைத்து சொல்வார்கள்.
C) வித்தியாசம் உண்டு, ஆனால், இந்தியாவில் இஸ்லாமிய அறிஞர்களால் சொல்லப்படும் இஸ்லாம் தான் சரியானது.
D) கருத்து சொல்லவிரும்பவில்லை.

3. ஒரு வேளை இந்தியாவும் இஸ்லாமிய நாடாக மாறுமானால், ஷரியா சட்டம் கொண்டு வரப்படுமானால், இங்கும், இப்படிப்பட்ட நிகழ்வுகள்:

A) நடக்கும்
B) நடக்க வாய்ப்பு இல்லை
C) கருத்து சொல்ல விரும்பவில்லை.

4. ஒரு வேளை இந்தியாவில் இஸ்லாம் ஷரியா சட்டம் போல, இந்துத்துவ கட்சிகள் ( ஷரியா போல‌) சட்டம் கொண்டு வந்து அது அமுலுக்கு வருமானால், எகிப்து நாட்டில் உள்ளது போல, ஒரு இந்து முஸ்லீமாக மாறக்கூடாது, அவனது அடையாள அட்டையில் இந்து என்றே இருக்கவேண்டும்,, போன்ற சட்டங்கள் கொண்டு வந்தால்? முஸ்லீமாக இருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள் அல்லது நினைக்கிறீர்கள்?

A) இது தவறானது, ஒரு இந்து இஸ்லாமை தழுவ வாய்ப்பு தரவேண்டும்.
B) இது நியாயமானது, இஸ்லாம் நாடுகளில் அவர்கள் மதத்திற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தால், இந்து‍ சட்டம் உள்ள நாட்டில் அவர்கள் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தவறில்லை.
C) இது தவறானது, ஜனநாயக முறை தான் சரியானது, அரசு மத அடைப்படையில் ஆளப்படுவது நல்லதல்ல.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP