சமீபத்திய பதிவுகள்

அஸ்திபாரமே ஆட்டங்கானுதுங்கோ

>> Wednesday, March 12, 2008

காரணம் 1. குர் ஆன்:

இஸ்லாமியர்கள் அதிக அளவில் "இஸ்லாம் கேள்வி பதில்கள்" நடத்துவதற்கு முக்கிய காரணமாக, முதல் காரணமாக இருப்பது குர்‍ஆன் என்று நான் சொல்வேன். ஏனென்றால், இன்று இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஷரியா சட்டம், முஸ்லீம்களின் செயல்பாடுகள் அனைத்தும் குர்‍ஆன் மீதே ஆதாரப்பட்டுள்ளது. சில இஸ்லாமிய அறிஞர்கள், குர்‍ஆனோடு மோதும் ஹதீஸ்கள் தவறானது என்று சொல்கிறார்கள், சிலர் இதை மறுக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணமாக நாம் குர்‍ஆனைத் தான் சொல்லமுடியும்.

குர்‍ஆன் ஒரு ஒழுங்காக அமைக்கப்படவில்லை, அதாவது குர்‍ஆனில் சொல்லப்படும் விவரங்கள் அனைத்தும் ஒரு வரிசையாக சொல்லப்படவில்லை. எந்த சூழ்நிலையில் என்ன வசனம் இறங்கியது என்று ஹதீஸ்களின் உதவியின்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அதிலும், இஸ்லாமியர் அல்லாதவர் குர்‍ஆனை படித்தால் அவருக்கு பெரும்பான்மையான வசனங்கள் புரியாது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், குர்‍ஆனை அரபியில் படிக்கத்தான் இஸ்லாமிய அறிஞர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். இதனால், பல சந்தேகங்கள் இஸ்லாமியர்களுக்கும் உண்டு, இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் உண்டு.

கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளை கவனித்தீர்களானால், அவைகள் பெரும்பான்மையாக "இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளைப் பற்றியதாகவே" இருக்கும். நமாஜ் பற்றி, உடல் சுத்தம் பற்றி, எத்தனை முறை குளிக்கவேண்டும், எப்போது குளிக்கவேண்டும், குறிப்பிட்ட சூழ்நிலையை சொல்லி இதன் பிறகு குளித்தபிறகு தான் நமாஜ் செய்யவேண்டுமா? போன்ற கேள்விகளாகவே இருக்கும். இதை எல்லாம் குர்‍ஆனில் காணமுடியாது, இவைகளைப் பற்றி ஹதீஸ்களில் பெரும்பான்மையாக காணமுடியும்.

எனவே, ஒரு முஸ்லீமுக்கு தேவையான அடிப்படை கோட்பாடுகள் அனைத்தும் குர்‍ஆனிலிருந்து கிடைப்பதில்லை. சரி, ஹதீஸ்கள் படித்து முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்தால், ஒவ்வொரு இஸ்லாமிய ஊழியரும் வித்தியாசமாக பதில்களை சொல்வார்கள், எனவே, முக்கியமாக இஸ்லாமியர்களுக்கே பல சந்தேகங்கள் குர்‍ஆனில் உண்டு, அதற்காகத்தான் அதிகமான கேள்வி பதில் நிகழ்ச்சிகள் இஸ்லாமுக்கு தேவைப்படுகிறது.துருக்கி நாட்டின் அரசாங்கம் குர்‍ஆன், மற்றும் ஹதீஸ்களுக்கு 21ம் நுற்றாண்டிற்கு ஏற்ற பொருள் கூற பல பேராசிரியர்களையும், இஸ்லாமிய மேதாவிகளையும் அழைத்து கு‍ர்‍ஆனுக்கு சரியான பொருள் கூறும்படி கேட்டுக்கொண்டுள்ளதாம். அதாவது, 7ம் நுற்றாண்டு முதல் உள்ள குர்‍ஆன் மொழிபெயர்ப்புகள், உரைகளை நம்பாமல், அதாவது அவைகள் சரியானவை அல்ல என்று முடிவு கட்டிவிட்டு, குர்‍ஆனுக்கு புதிய உரையை எழுத முயற்சி எடுத்துள்ளது. அதாவது, உலகமெங்கும் அல்லாவின் வார்த்தையாகிய குர்‍ஆனை பரப்ப மதினாவில் அச்சடிக்கப்படும் குர்‍ஆனின் மொழியாக்கத்தையும் துருக்கி நாடு "சரியான மொழியாக்கம்" என்று அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.(இதைப்பற்றி இங்கு படிக்கவும்:
துருக்கி ஷரியா சட்டம் திருத்த முயற்சி (English : http://www.guardian.co.uk/world/2008/feb/27/turkey.islam)

ஆனால், கிறிஸ்தவர்களுக்கு அப்படியில்லை, எங்களுக்கு தேவையான எல்லா கோட்பாடுகளையும், சத்தியங்களையும் நாங்கள் பைபிளை தமிழில் படிப்பதினால் தெரிந்துக்கொள்கிறோம். மட்டுமல்ல, எங்களுக்கு இஸ்லாம் பழக்கவழக்கங்கள் போல, இத்தனை முறை கைகளை இந்த சூராக்களை சொல்லி கழுவவேண்டும், நகாஜ் படிக்கும் போது இத்தனை முறை எழுந்திருக்கவேண்டும், உட்காரவேண்டும், விரல்களை ஆட்டவேண்டும் போன்ற விதிமுறைகள் இல்லை. ஒரு பயனுமில்லாத பழக்கவழங்கள் மூலமாக பைபிள் மக்களை குழப்புவதில்லை, அதனால் அவைகளை விளக்கவேண்டிய அவசியமும் கிறிஸ்தவ ஊழியர்களுக்கு இல்லை. கிறிஸ்தவம் உள்ளத்தின் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க எங்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. உடல் தூய்மை, ஆரோக்கியம் போன்றவைகளை எந்த நாட்டில் நாங்கள் வாழுகின்றோமோ அந்த நாட்டின் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நாங்கள் உடல் தூய்மையை, ஆரோக்கியத்தை அடைந்து வாழ்ந்துவிடுகிறோம்.

குர்‍ஆன் பைபிளோடு ஒப்பிடும் அளவிற்கு அதற்கு தகுதியில்லை என்று கீழ்கண்ட‌ கட்டுரை சுட்டிக்காட்டுகிறது, இது உண்மையா இல்லையா என்பதை இந்த கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? ஆசிரியர்: சாமுவேல் கிரீன்


COMPARING THE BIBLE AND THE QUR'AN (How to do it Accurately) By Samuel Green

ஆக, குர்‍ஆன் மூலமாக வரும் குழப்பங்களை தீர்க்க உங்களுக்கு அதிகமான நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது. எங்களுக்கு அப்படி இல்லை, எனவே கிறிஸ்தவ ஊழியர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விவரங்கள் குறித்து தங்கள் பிரசங்க பீடங்களில் நின்று மக்களுக்கு சொற்பொழிவு ஆற்றினாலே போதும்.


http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_8881.html

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP