சமீபத்திய பதிவுகள்

டேய் மாப்பு என்னால ஒன்ன வச்சுட்டே சமாளிக்க முடியல,எப்படிடா நால ஓரே நேரத்துல சமாளிக்கிற.நீ மெய்யலுமே பெரிய்ய ஆளுடா

>> Wednesday, March 5, 2008

உங்கள் அபிமான படைப்புகள்

பிளவுஸும்,பிராவும் போடாத அம்மா(+18 அடல்ட் ஒன்லி)

http://thamilislam.blogspot.com/2008/03/18.html

டேய் மாப்பு என்னால ஒன்ன வச்சுட்டே சமாளிக்க முடியல,எப்படிடா நால ஓரே நேரத்துல சமாளிக்கிற.நீ மெய்யலுமே பெரிய்ய ஆளுடா

பணக்காரன் ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவனுக்கு நாலாமவள் மேல் கொள்ளை ஆசை. அவளை அலங்கரித்து அழகு பார்ப்பான், இனிய உணவளித்து உபசரிப்பான். அவளின் இச்சைகளை தீர்க்க இவன் தவறியதேயில்லை.

மூன்றாமவள் மீதும் அவன் அன்பு வைத்திருந்தான். அவள் தன்னுடன் இருப்பதில் பெருமை கொண்டான். தன் நண்பர்களுக்கு அவளை அறிமுகப்படுத்துவதில், அவளைக் கண்டு அவர்கள் மலைப்பதில் பெருமை கொள்வான். ஆயினும் எப்போதும் அவள் யாருடனும் போய்விடக் கூடும் எனும் பயம் அவனிடம் இருந்துகொண்டேயிருந்தது.

இரண்டாமவள் இவன்மீது பற்றுள்ளவளாயிருந்தாள். இவன் கவலைக்குள்ளாகையில் அவளிடம் ஆறுதல் கிடைத்தது. இவனின் நம்பிக்கைக்குரியவளாக அவள் இருந்தாள்.

முதல் மனைவியை பணக்காரன் கண்டுகொள்ளவேயில்லை. ஆயினும் அவள் அவன் மீது அதீத அன்பு வைத்திருந்தாள்.

ஒரு நாள் பணக்காரன் உடல் நலம் குறைந்து படுக்கையிலானான். மரணத்துக்குப் பின் தனிமையில் வாடுவோமே எனும் கவலை அவனுக்கு வந்தது.

தான் அதிகம் அன்புவைத்திருந்த நான்காம் மனைவியை அழைத்து 'என் மரணத்துக்குப் பின் துணையாக என்னோடு வருவாயா?' எனக் கேட்டான்.

அவளோ. 'முடியவே முடியாது' எனச் சொல்லிவிட்டாள்.

மூன்றாம் மனைவியோ, 'முடியாது! உன் மரணத்துக்குப் பின் நான் வேறொருவரை மணக்கப் போகிறேன் என்றாள்'

இரண்டாமவள்,'நான் உன்னை கல்லரையில் இடும்வரை மட்டும் உன்னோடு இருக்க முடியும். அதற்குப் பின் முடியாது என்றாள்.'

முதலாம் மனைவியோ,'நான் உன்னோடு வரத் தயார் என்றாள்.'

அவன் அவளைப் பார்த்தான். அவளோ கவனிக்கப்படாமல் ஒல்லியாக அழகிழந்து வறியவளைப் போல காணப்பட்டாள்.

'நான் எனக்கு இயன்றபோது உன்னை சரியாகக் கவனித்திருக்க வேண்டும்' என கவலை கொண்டான்.

நமக்கெல்லாருக்குமே 4மனைவிகள் (அல்லது கணவன்கள் என எடுத்துக் கொள்ளவும்)

நான்காம் மனைவி நம் உடல். இறப்புக்குப் பின் அது நம்மோடு வருவதில்லை.
மூன்றாம் மனைவி நம் சொத்துக்கள். இறப்புக்குப் பின் வேறொருவரிடம் போய் சேர்கின்றன.
இரண்டாம் மனைவி நம் சொந்தங்கள். கல்லறைவரைதான் அவற்றின் துணை.
நாம் கவனிக்கத் தவறும் நம் முதல் மனைவி நம் ஆன்மா.

இணையத்தில் படித்த கதை. இன்னும் படிக்க http://www.indianchild.com/ (இப்பதான் பார்த்தேன். சில கதைகள் கிறீத்துவ பின்னணியில் சொல்லப்பட்டுள்ளன. You have been warned).

http://cyrilalex.com/?p=390

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

வால்பையன் March 5, 2008 at 2:13 AM  

நல்ல கருத்துக்கள்

//சில கதைகள் கிறீத்துவ பின்னணியில் சொல்லப்பட்டுள்ளன. You have been warned).//

:))) LOL

வால்பையன்

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP