சமீபத்திய பதிவுகள்

சீக்கிய மத குருக்களை கொன்று,கோவிலை இடித்து,சிலைகளை புதைத்து,வரி கட்டாதவர்களை யானையை வைத்து மிதித்து கொன்றவன்

>> Thursday, March 6, 2008

அவுரங்கசீப் நடத்திய அட்டூழியங்களை ஓவிய கண்காட்சியில் வைக்க கூடாதா? திடீர் எதிர்ப்பால் பதட்டம்

சென்னை:குஜராத் சோமநாதர் கோவில் மற்றும் மதுரா கிருஷ்ணர் கோவிலை, மொகலாய மன்னர் அவுரங்கசீப் இடிப்பதாக சித்தரிக்கப்பட்ட ஓவியங்களை, சென்னையில் நடைபெறும் கண்காட்சி ஒன்றில் இருந்து எடுக்க வேண்டும் என முஸ்லிம்கள் வற்புறுத்தினர்.



ஆனால், வரலாற்று ஆவணங்களின்படி தான் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன; அதை எடுக்க மாட்டோம்' என்று, கண்காட்சி அமைப்பாளர்கள் மறுத்ததால், திடீர் பரபரப்பு ஏறபட்டுள்ளது.

சென்னை லலித் கலா அகடமியில், தீவிரவாத எதிர்ப்பு அறக்கட்டளை (பேக்ட்) சார்பில், `மொகலாய ஆவணங்களில், அவுரங்கசீப்' என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி கடந்த 3ம் தேதி தொடங்கியது. கண்காட்சியில், ஜியா வரி கொடுக் காத இந்துக்களை மொகலாய மன்னர் அவுரங்கசீப் யானைகளை வைத்து, மிதித்து கொல்வது, முஸ்லீமாக மதம் மாற மறுத்த சீக்கிய மத குருவின் சீடர்கள் மூன்று பேரை வெட்டிக் கொல்வது, மதுரா கிருஷ்ணர் கோவிலை இடித்து, பேகம் மசூதி கட்டி, மசூதி வாசல் படிக்கட்டிற்கு அடியில், கோவிலில் இருந்த கடவுள் விக்ரகங்களை புதைத்தது, குஜராத் சோமநாதர் கோவிலை இடிப்பது போன்ற காட்சிகள் ராஜஸ்தான் பாணி சித்திரங்களாக வைக்கப்பட்டிருந்தன.

இதை பார்வையிட்ட முஸ்லிம் வக்கீல் உட்பட இருவர், குஜராத் சோமநாதர் கோவில் இடிப்பு, மதுரா கோவில் இடிப்பு ஓவியங்களை எடுக்க வேண்டும் என்றனர்.அதற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மறுத்தனர்.பின்னர், கண்காட்சியை அகற்ற வேண்டும் என்று அகடமிக்கு அந்த வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார். உடனே அகடமி நிர்வாகத்தினர், கண்காட்சியை எடுக்க சொல்லி வற்புறுத்தினர்.போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், கண்காட்சியை பார்வையிட வந்த பள்ளி மாணவ, மாணவிகளை திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், ஜனதா கட்சி (எஸ்) மாநில தலைவர் சந்திரலேகா, விஸ்வ இந்து பரிஷத் மாநில தலைவர் வீரபாகு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கண்காட்சியை பார்வையிட்ட பின்னர், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:

கண்காட்சியில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் கற்பனையோ, கதையோ இல்லை. ஆதாரத்துடன் கூடிய வரலாற்று சுவடிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிமாக மதம் மாறாத சீக்கிய மத குருவின் சீடர்களை அழித்தது குறித்த ஓவியங்கள், அனைத்து சீக்கிய மத கோவில்களிலும் வைக்கப்பட்டுள்ளன. அதையெல்லாம் இவர்களால் எடுக்க சொல்ல முடியுமா?

ராமபகவான், சீதா பிராட்டி, அனுமன், பாரத மாதா ஆகியோரை நிர்வாணமாக வரைந்தார் எம்.எப்.ஹுசைன். அப் போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அது கருத்து சுதந்திரம் என்றனர். ஆனால், இந்த கண்காட்சி மட்டும் கருத்து சுதந்திரம் கிடையாதா? எந்த நாட்டிலும் இல்லாத கோமாளி கூத்துதான் இங்கு நடக்கிறது. உண்மையான வரலாற்றை சொல்வதற்கு உரிமை இல்லை. உண்மையான வரலாற்றை தெரிந்து கொண்டால், இந்தியாவின் நிலையே தலைகீழாக மாறிவிடும். முன்பு அறிவித்தபடி, இந்த கண்காட்சி கண்டிப்பாக 9ம் தேதி வரை நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவத்தால், அப்பகுதியில் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாவண்ணம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

http://www.dinamalar.com/

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP