ஐரோப்பிய கால்பந்து ரஷியாவிடம் கிரீஸ் தோல்வி: கால் இறுதி வாய்ப்பை இழந்தது
>> Tuesday, June 17, 2008
ஐரோப்பிய கால்பந்து ரஷியாவிடம் கிரீஸ் தோல்வி: கால் இறுதி வாய்ப்பை இழந்தது
சால்ஸ்பர்க், ஜுன். 15-
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ரஷியாவிடம் கிரீஸ் தோல்வி அடைந்தது. இதனால் கால் இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
ஐரோப்பிய கால்பந்து போட்டி சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா நாடுகளில் நடந்து வருகிறது.
இதில் நேற்று இரவு நடந்த முதல் போட்டியில் ஸ்பெயின்-சுவீடன் அணிகள் மோதின. ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஒரு போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்று 3 புள்ளிகள் பெற்று இருந்தது. இந்த போட்டி வெற்றி மூலம் மேலும் 3 புள்ளிகள் பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு போட்டியில் ரஷியா-கிரீஸ் அணிகள் மோதின. இதில் ரஷியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கிரீஸ் நடப்பு ஐரோப்பிய சாம்பியன் ஆகும். இது முதல் போட்டியில் சுவீடனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இப்போது 2-வது போட்டியில் ரஷியாவிடம் தோல்வி அடைந்து உள்ளது.
டி பிரிவில் ஸ்பெயின் கால் இறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் சுவீடன், ரஷிய அணிகள் தலா ஒரு வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் உள்ளன. இரு அணிகளும் இன்றும் 24-ந் தேதி நடக்கும் போட்டியில் மோத உள்ளன. அதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அது கால் இறுதிக்கு தகுதி பெற்று விடும். டிராவில் முடிந்தால் கூட அதில் ஒரு அணிதான் கால் இறுதிக்கு வரமுடியும்.
0 கருத்துரைகள்:
Post a Comment