குண்டுவெடிப்பு: 3 தீவிரவாத இயக்கங்கள் மீது சந்தேகம்
>> Saturday, July 26, 2008
குண்டுவெடிப்பு: 3 தீவிரவாத இயக்கங்கள் மீது சந்தேகம் | |
| |
பெங்களூரில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு லஷ்கர் - இ - தொய்பா, சிமி அல்லது வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் முஜாஹிதீன் அமைப்பு காரணமாக இருக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு சந்தேகம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பெங்களூரிலும், கர்நாடகத்தின் பிற பகுதிகளிலும் லஷ்கர் - இ - தொய்பா மற்றும் சிமி அமைப்புகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். அதேபோல வங்கதேசத்தை தளமாகக் கொண்டு இயங்கும் ஹூஜி எனப்படும் ஹர்கத் உல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். எனவே இதற்குப் பழி வாங்கும் வகையில் இன்றைய குண்டுவெடிப்புக்கு மேற்கூறிய 3 அமைப்புகளைச் சேர்ந்த ஒரு இயக்கம் காரணமாக இருக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். | |
(மூலம் - வெப்துனியா) |
0 கருத்துரைகள்:
Post a Comment