முதல் நாளில் விளையாடியது மழை; இலங்கை அணி 85/2
>> Wednesday, July 23, 2008
முதல் நாளில் விளையாடியது மழை; இலங்கை அணி 85/2 | |
| |
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் துவக்க நாள் ஆட்டம், மழை காரணமாக 22 ஓவர்களிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. கொழும்பு மைதானத்தில் ஆட்டம் தடைபட்டபோது, இலங்கை அணி 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, அந்த அணியின் வார்னபுரா 50 ரன்களும், ஜெயவர்த்தனே 16 ரன்களும் எடுத்திருந்த நிலையில் களத்தில் இருந்தனர். முன்னதாக, துவக்க ஆட்டக்காரர் வாண்டோர்ட் 3 ரன்கள் எடுத்திருந்தபோது, இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில், கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து, சங்ககாரா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜாகீர்கான் வீசிய பந்தில், திராவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. | |
(மூலம் - வெப்துனியா |
0 கருத்துரைகள்:
Post a Comment