சமீபத்திய பதிவுகள்

நிர்வாணமும்,பரிகாரமும்,பரபரப்பும்

>> Thursday, July 10, 2008

பரிகாரம் செய்வதாக கூறி
பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்த ஜோதிடருக்கு அடி-உதை
நடுரோட்டில் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார்கள்

ஈரோடு, ஜுலை.9-

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்ததாக ஒரு ஜோதிடரை சட்டையை பிடித்து இழுத்து, நடுரோட்டில் வைத்து தாக்கினார்கள்.

ஜோதிட நிலையம்

ஈரோட்டை அடுத்த ரங்கம்பாளையத்தில் பிரம்மரிஷி என்கிற ஜோதிட நிலையம் வைத்து இருப்பவர், கிரி எஸ்.அய்யர்.

இவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த கணவன்-மனைவி 2 பேர் நேற்று முன்தினம் வந்தார்கள். ஓட்டல் வியாபாரத்தில் நொடிந்து போய் இருப்பதாகவும், அதற்கு பரிகாரம் தேட ஆலோசனை கூறும்படியும் ஜோதிடரிம் கேட்டு இருக்கிறார்கள்.

அவர்களிடம் பேசிய ஜோதிடர் பூஜைக்காக எலுமிச்சை பழம் வேண்டும் என்று கூறி உள்ளார். உடனே எலுமிச்சை பழம் வாங்குவதற்காக அந்த பெண்ணின் கணவர் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் அந்த பெண்ணுடன் தனியாக பேசிக்கொண்டு இருந்தார். கணவர் வந்ததும் சிறு பூஜை செய்து விட்டு, மீண்டும் நாளை வருமாறு கேட்டுக்கொண்டார்.

நிர்வாண பூஜை

அவர்கள் வெளியே வந்ததும், அந்த பெண் அழத்தொடங்கினார். அவருடைய கணவர் என்ன நடந்தது என்று விசாரித்தபோது, ஜோதிடர் தன்னிடம் ஆபாசமாக பேசியதாகவும், தொழில் பெருகி, செல்வம் அதிகரிக்க ஒருநாள் முழுவதும் நிர்வாணமாக இருந்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் அழுது கொண்டே கணவரிடம் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், நேரடியாக கேட்டால் ஜோதிடர் சரியான பதில் கூறமாட்டார். அவரது வழியிலேயே சென்று பிடிக்க திட்டமிட்டார். அவர் பூஜை செய்ய அழைத்தபடி நேற்று தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் ஜோதிட நிலையத்துக்கு வந்தார். முதலில் கணவன்-மனைவி மட்டும் அங்கு சென்றார்கள்.

அவர்கள் வந்ததும், ஜோதிடர் கிரி, பூஜைக்கு பூ வாங்கி வரும்படி கூறினார். மனைவியை அங்கு விட்டு விட்டு கணவர் மட்டும் புறப்பட்டு சென்றார். உடனடியாக கதவை தாழிட்ட ஜோதிடர், அந்த பெண்ணிடம் நிர்வாணமாக இருக்கும் படி கூறியதாக தெரிகிறது.

நடுரோட்டில் அடி-உதை

அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த அந்த பெண் அருகில் கிடந்த நாற்காலியை எடுத்து ஜோதிடரை தாக்கினார். சத்தம் கேட்டு அங்கு நின்று கொண்டு இருந்த உறவினர்களும் ஓடி வந்து ஜோதிடரை அடித்து உதைத்து தாக்கினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் ஏராளமானவர்கள் கூடினார்கள்.

அவர்களுடன் வந்த உறவு பெண் அந்த ஜோதிடரை நடுரோட்டில் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதால், வேடிக்கை பார்க்க கூட்டம் திரண்டு விட்டது.

இது பற்றி தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜோதிடரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றார்கள். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் விசாரணை நடத்தி வருகிறார்.

சம்பவம் குறித்து அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வரும் இந்திராணி என்பவர் கூறியதாவது:-

நம்பிக்கை

நாங்கள் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறோம். இந்த ஜோதிடரையும் நீண்டகாலமாக எங்களுக்கு தெரியும். அவர் எங்களிடம், கரூர், கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சென்று பலருக்கு ஜோதிடம் சொல்லி வருவதாக கூறுவார்.

அதுபோல் வெளிïரில் இருந்தும் ஏராளமானவர்கள் அவரை தேடி வந்து ஜோதிடம் பார்த்து வந்தார்கள். இதனால் அவர் மீது எங்களுக்கு நம்பிக்கையும் மரியாதையும் ஏற்பட்டது. இந்த நிலையில் வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த இந்த பெண்ணும், அவருடைய கணவரும் ஜோதிடம் பார்ப்பதற்காக வந்தார்கள். அவர்கள் ஏற்கனவே ஓட்டல் நடத்தி, நஷ்டம் ஏற்பட்டு நலிந்து போய் இருந்தார்கள். இனிமேல் ஏதாவது தொழில் தொடங்கினால், நிலைக்குமா? என்று பார்ப்பதற்காக வந்தார்கள்.

ஆனால் இவர் இப்படிபட்டவர் என்று நாங்கள் நினைக்கவில்லை. முதல்நாள் ஜோதிடரை அந்த பெண் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் கண்ணீர் விட்டு அழுதார். அவரிடம் நாங்கள் ஏன்? என்று கேட்டபோது, ஜோதிடர் ஆபாசமாக பேசியதாக கூறினார். மேலும், ஒரு நாள் முழுவதும் நிர்வாணமாக அவருடன் இருந்து பூஜை செய்தால், வியாபாரம் செழிக்கும், செல்வம் கொட்டும் என்று கூறி இருக்கிறார். உடனடியாக அவரிடம் கேட்டால் மறுத்து விடுவார் என்பதால், அவருடைய வழியிலேயே சென்று அவரை அம்பலப்படுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு இந்திராணி கூறினார்.

விசாரணை

ஜோதிடர் கிரி எஸ்.அய்யர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு ஜீவா நகரில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளார்கள்.

இதுவரை அவரைப்பற்றி எந்த புகாரும் வந்தது இல்லை என்று அந்த பகுதியினர் தெரிவித்து உள்ளார்கள்.

இது பற்றி தாலுகா போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP