சமீபத்திய பதிவுகள்

அப்பாவி முஸ்லீம்கள் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம்

>> Friday, October 24, 2008

குஜராத்தில் முஸ்லீம் சமுதாயத்தை வன்முறையா சேதப்படுத்திய சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து கிறிஸ்தவர்களை ஒரிசாவிலும்,கர்நாடகாவிலும் மற்ரும் இந்தியாவின் பல பாகங்களிலு தாக்கியது எல்லோரும் அறிந்ததே.தொடர்ந்து ஆந்திராவில்  ஊர்வலம் என்ற பெயரில் ரௌடிகளை வைத்து இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாயலில் கல்லெறிந்து வன்முறையை தூண்டிவிட்டு அப்பாவி முஸ்லீகளை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.அதனை ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.அப்பாவிகள் எந்த மதத்தின் பெயரால் கொல்லப்படுவதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது.இது காட்டுமிராண்டித்தனம்.தமிழ் முஸ்லீம் பிளக்கர் தன் கண்டணத்தை பதிவு செய்கிறது.
 
 
ஆந்திராவில் நடந்தது என்ன?முழுவிவரம் கீழே
 
 
 
ஆந்திராவில் ஆறு முஸ்லிம்களைக் கொளுத்திக் கொன்ற கயவர்களின் வெறியாட்டம்!
 
ஆண்டு தோறும் பிள்ளையார் சதுர்த்தி/வினாயகர் ஊர்வலம் என்ற பெயரால் நாடு முழுதும் ஆர்.எஸ்.எஸ் / சங் பரிவாரங்கள் நடத்தி வரும் சமூக விரோதச் செயல்கள் அனைவரும் அறிந்ததே! ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப் பட்டுக் கொண்டிருந்த கயமைத் தனத்தை விரிவாக்கி இப்போது 'தசரா' ஊர்வலம் என்ற பெயரிலும் அடாவடி ஊர்வலம் நடத்தி, இந்து-முஸ்லிம் ஒற்றுமையைக் குலைத்து, நாட்டில் அமைதியை நிரந்தரமாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
"முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில்தான் ஊர்வலம் செல்வோம்; முஸ்லிம்களின் வணக்கத்தலமான மஸ்ஜித் இருந்தால் கட்டாயம் அந்த வழியாகத்தான் பிள்ளையாரைக் கொண்டு போவோம்" என்று பிடிவாதம் பிடிக்கும் ஹிந்துத்துவாவின் உள்நோக்கம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே!
 
பிடிவாதத்தை மாற்றிக் கொள்ளாமல், இம்முறைப் பிள்ளையாரை மாற்றி, 'துர்கா'வை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஊர்வலம் போயினர் ஹிந்துத்துவாவினர்.
 
ஆந்திர மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டதிலுள்ள பைன்ஸா என்ற ஊரில் கடந்த வெள்ளிக்கிழமை (10.10.2008) முஸ்லிம்கள் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் தசரா ஊர்வலம் என்ற பெயரில் துர்கா சிலைகளைக் கரைப்பதற்காக ஜும்ஆ மஸ்ஜித் வழியாகக் கொண்டு வந்த இவர்கள், வழக்கம்போல் முஸ்லிம்களைக் கொச்சைப் படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியும் மஸ்ஜிதுக்குள் கற்களை எரிந்தும் வன்முறையைத் தூண்டினர்.
 
முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரண்டு மருந்துக்கடைகளுக்குள் புகுந்து எல்லா மருந்துகளையும் அள்ளித் தெருவில் வீசினர் துர்கா பக்தர்கள் என்ற பெயரில் வந்த ஹிந்துத்துவாவினர். ஒரு ஜவுளிக்கடை, ஒரு வளையல்கடை, ஓர் உணவகம் உட்பட முஸ்லிம்களுக்குச் சொந்தமான நாற்பது கடைகளையும் ஒரு டஜன் வாகனங்களையும் அடித்து நொறுக்கியும் தீவைத்துக் கொளுத்தினர்.
 
ஹிந்துத்துவாவினர் எதிர்பார்த்தபடியே கலவரம் மூண்டது! கலவரத்தில் நால்வர் உயிரிழந்தனர். காவல்துறை குறிபார்த்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று முஸ்லிம்கள் படுகாயமடைந்தனர்படுகாயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள டெக்கான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டனர். அவர்களுள் மாஜித் அஹ்மத் என்ற இளைஞரின் வயிற்றில் குண்டு பாய்ந்ததால் அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளார்.

 
 

 
 
பைன்ஸாவில் தொடங்கிய வன்முறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது.
 
புரானா பஜார், ஜுல்ஃபிகார் கல்லி, காரி கல்லி ஆகிய பகுதிகளில் வசித்த முஸ்லிம்கள் வீடுகளைக் காலி செய்து கொண்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றனர்.
 
நிர்மல் டவுன் பகுதியிலுள்ள மார்கெட் மஸ்ஜிதுக்குள் இந்த ரவுடிகளால் மதுப் புட்டிகள் வீசப் பட்டன. மஸ்ஜிதின் இமாம் ஹாபிஸ் முஹம்மது ஆஸிஃப் நையப் புடைக்கப் பட்டார். மஸ்ஜிதின் ஒருங்கிணைப்புக் குழுவினர் மஸ்ஜிதின் சாவிகளைக் காவல் துறையிடம் ஒப்படைத்து விட்டுப் பாதுகாப்பு வேண்டி நிற்கும் அளவுக்குச் சூழ்நிலை மோசமானது. நிர்மல் டவுனின் பல பகுதிகளிலும் கல் வீச்சுத் தொடர்ந்தது.
 
கரீம் நகர் ஹாபிஸ் மஸ்ஜிதுக்குள் வன்முறைக் கூட்டம் கல் வீசித் தாக்கியதில் மூவர் காயமுற்றனர்.
 
இதற்கிடையில், "துர்கா ஊர்வலத்தின்போது கலவரத்தைத் தூண்டியவர்களைக் கண்டு பிடித்துக் கைது செய்வதுதான் எங்கள் முதல் வேலை" என்று பைன்ஸாவில் முகாமிட்டுள்ள காவல்துறை ஆணையர் பூர்ணச்சந்திர ராவ் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். கலவரத்தை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது.
 
ஊரடங்கு உத்தரைவை மீறி, அன்றிரவு வாள், இரும்புத் தடிகள் போன்ற பயங்கர ஆயுதங்களோடு ஓர் ஆட்டோவில் அலைந்து கொண்டிருந்த ஐவரை ரோந்து சென்ற காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது அந்தக் கும்பல் 'ஹிந்து வாஹினி' என்ற அமைப்பின் உறுப்பினர்கள் என்று தெரிய வந்தது. ஐவர் கும்பல் கைது செய்யப் பட்டது; ஆட்டோ கைப்பற்றப் பட்டது.
 
"ஆர். எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்புகளில் ஒன்றான ஹிந்து வாஹினி என்ற பயங்கரவாத அமைப்பு, தெலுங்கானா ராஷ்ட்ர ஸமிதி கட்சியின் உள்ளூர் எம்.எல்.. நாராயண் ராவ் பட்டேலின் ஆதரவோடு செயல் படுவதாகும். முஸ்லிம்களது பொருளாதாரத்தைத் திட்டமிட்டுச் சீரழிப்பதுதான் அவர்களது குறி" என்று கலவரப் பகுதியான பைன்ஸாவுக்கு வருகை தந்து பார்வையிட்ட, மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற மேலைவை உறுப்பினருமான அதுல்லாஹ் உவைஸீ குற்றம் சாட்டினார். மேலும், "கலவரங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமிருக்கும் பைன்ஸா பகுதியில் நூற்றுக் கணக்கானோர் துர்கா ஊர்வலம் செல்ல அனுமதித்த காவல்துறை, வெறும் 6 காவலர்களையும் ஒரு துணை ஆய்வாளாரையும் ஓர் ஆய்வாளரையும் பாதுகாப்புக்கென்று ஏற்பாடு செய்திருந்தது அதன் பொறுப்பற்ற தன்மையை வெட்ட வெளிச்சமாக்குகிறது" என்றும் குறிப்பிட்ட அவர், வன்முறைச் நிகழ்வுகளை விசாரிக்க ஸி.பி.ஐக்கு உத்தவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
மாவட்ட ஆட்சியர் அஹ்மத் நதீம், மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் கே. ஜனா ரெட்டி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜி. வினோத், மாநிலக் காவல்துறைப் பொது ஆணையர் எஸ்.எஸ்.ப்பி யாதவ் ஆகியோர் கலவரப் பகுதியைப் பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் கலவரத்துக்கான நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டார்.
 
கலவரம் மேலும் பரவாமல் பார்த்துக் கொள்ளும்படி மாநிலக் காவல்துறையை முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி அடுத்த நாள் சனிக்கிழமை (11.10.2008) அன்று கேட்டுக் கொண்டார்.
 
ஆனால், ஹிந்துத்துவாவின் திட்டமிட்ட பயங்கரவாதப் படுபாதகச் சதிச் செயல் அடுத்த நாளிரவு நிகழ்ந்தேறியது.
 
ஆம்! வெள்ளிக்கிழமையன்று நான்கு பேர் கொல்லப்பட்ட பைன்ஸிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்திலுள்ள வட்டோலி என்ற கிராமத்தில் உள்ள மஹ்பூப் கான் என்பவரது வீட்டுக்குள் ஞாயிறு (12.10.2008)  அதிகாலை இரண்டு மணியளவில் மதவெறிக் கும்பல் ஒன்று நுழைந்து, வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த  மஹ்பூப் கான்(55), அவர் மனைவி ஸஃபியா பேகம்(50), மக்களான ரிஸ்வானா(22), அர்ஸலான்(6), நுஃமான்(3), தூபா 'ஃபலாக்(2) ஆகிய அந்தக் குடும்பத்தின் மொத்த உறுப்பினர்கள் ஆறு பேரையும் கொன்றது.
 
பின்னர், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களின் மீது பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தயாராகக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றினர். வெளியே வந்து வீட்டின் கதவை வெளிப்பக்கம் பூட்டி, வீட்டுக்குத் தீ வைத்து விட்டு, வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போய் விட்டனர். சாம்பலான ஆறு முஸ்லிம்களில் மூன்று குழந்தைகள். இதில் ஒரு குழந்தை இரு வயதுள்ள பால்குடி மாறா பச்சிளம் குழந்தையாகும்.


 
 
 
 
"தீய்ந்த வாசனையும் தீயினால் மரச் சட்டங்கள் பற்றியெரியும் சப்தத்தையும் கேட்டு, மஹ்மூதின் வீட்டுக்கருகில் ஓடி வந்து பார்த்தேன். வீடு முழுக்க எரிந்து கொண்டிருந்தது. மண்ணெண்ணை வாசனை மூக்கைத் துளைத்தது. ஆனால், வீட்டுக்குள்ளிருந்து யாரிடமிருந்தும் குரல் வரவில்லை; வாசல் பக்கம் முழுக்கவும் தீ பரவி ஜுவாலையுடன் எரிந்து கொண்டிருந்ததால் என்னால் உள்ளே போக முடியவில்லை." என்று பயங்கரத்தை நேரில் பார்த்த சிபுரல்ல நர்சன்னா என்பவர் தெரிவித்தார். காவல்துறை அங்கு வந்து சேரும் முன்னரே அவர்களது உடல்கள் அடையாளம் தெரியாமல் தீயில் கருகியிருந்தன. அதிகாலை 2:40க்கு நின்று போயிருந்த மஹ்பூப் கானுடைய கைக்கெடியாரத்தைக் கண்டெடுத்த காவல்துறையினர், இந்தப் பயங்கரப் படுகொலை இரண்டரை மணிக்கு நடந்திருக்கக் கூடும் என்று தெரிவித்தனர். வட்டோலியில் இரு முஸ்லிம் குடும்பங்களே வசித்து வந்தன. அதில் ஒன்றுதான் மஹ்பூப் கானின் குடும்பம்.
 
"அண்டை வீட்டாரது தகவல் கிடைத்து பைன்ஸாவிலிருந்து கிளம்பி இங்கு நான் வந்து சேர்ந்தபோது கரிக் கட்டைகளைத்தான் பார்க்க முடிந்தது. இது திட்டமிட்ட படுகொலை. ஆனால் என் மைத்துனர் யாரிடமும் வம்புக்கெல்லாம் போகிறவரல்லரே" என்று அரற்றினார் மஹ்பூப் கானின் மச்சான் முஜாஹித் கான். "ஓர் அப்பாவிப் பெட்டிக் கடைக்காரது குடும்பத்தை ஓரிரவில் பூண்டோடு அழித்து விட்டனரே படுபாவிகள்" என்று அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நிருபரிடம் கதறினார்.
 
"ஆர்.எஸ்.எஸ் சமூக விரோதக் கும்பல், தசராவைக் காரணமாக வைத்துக் கொண்டு பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில் இப்படிப் பட்ட பயங்கரச் செயல்கள் சர்வ சாதாரணமாக நடப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது" என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
நன்றாகக் கவனிக்க வேண்டும்.
 
மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. கலவரம் பரவாமல் கண்காணித்துக் கொள்ளுமாறு காவல்துறைக்கு அம்மாநில முதல்வர் கட்டளையிடுகிறார்.
 
ஆனால், மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் சதிச் செயல் அடுத்த நாளிரவு நிகழ்ந்தேறுகிறது.
 
குஜராத்தில் நவீன ஹிட்லர் மோடி துவங்கி வைத்த முஸ்லிம்களுக்கு எதிரான அக்கிரமமும் அதனைத் தொடர்ந்து குஜராத்தில் காவிக் கும்பலுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றியும் குற்றம் இழைத்தவர்களை டெஹல்கா போன்ற புலன் விசாரணை இதழ்கள் வீடியோ ஆதாரங்களுடன் நிறுவிய பின்னரும் ஒன்றும் செய்ய முடியாநாட்டின் நீதிதுறை தந்த ஊக்கம், நாடுமுழுவதும் சங்கபரிவாரத்தினரை வெறி கொண்டு அலைய வைத்திருக்கின்றது.
 
மனித இனமே அஞ்சி நடுங்கும்படியாக நடந்த குஜராத் இனப்படுகொலையை முன்மாதிரியாகக் கொண்டு ஒட்டு மொத்த இந்தியாவையும் அது போன்றே மாற்ற முயலும் மனிதத் தன்மையற்ற சங்கபரிவாரத்தினரை அரசு கடுமையாக ஒடுக்க முன்வரவில்லையெனில், மதசார்பற்ற, ஜனநாயக இந்தியா உலக அரங்கில் தகரும் நாள் வெகுதொலைவில் இல்லை.

 

 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

Anonymous October 24, 2008 at 4:30 AM  

appavi "Muslim" Mattum alla

Indiayavil 100 Kodi Appavi Hindukkalum Ullarhal.

Ean Indiayavil engu Gundu vedithalum Muslim Thiveravathi than Kaithu seyiyappadukiran

Appothu ungal Kural antha Muttal Muslim thiveravathi kalukku ethiraha Nalla Muslimaha Theruvil erangi poradungal.

Evvalavu nal Ungalai (muslim) ketka alillai Thiruppi adikkum pothu valikkiratha.

Nee unmaiayai chol. Ulahil engu thiviravatham thalai thookkuhiratho angellam Muslim kal than pirachinaiyaha ullanar.

Itharkku pathil sollivittu pathivu podu

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP