சமீபத்திய பதிவுகள்

கழிவறையில் ரகசியக் கேமரா - ஆபாச சிடி - செல்போன் - இணைய தளங்கள் - பெண்களுக்கு பகிரங்க எச்சரிக்கைப் பதிவு

>> Saturday, November 22, 2008

 

கேரளாவில் ஒரு பேருந்து நிலையத்தில் இருந்த பெண்கள் கழிவறையில் 9 ரகசிய கேமராக்கள் பொருத்தப் பட்டு அந்தக் கழிவறையைப் பயன்படுத்திய பெண்கள் ஆபாசமாகப் படம் பிடிக்கப் பட்ட கொடுமை கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.

வக்கிரர்கள் தாங்கள் இப்படி திருட்டுத் தனமாக எடுக்கும் ஆபாசப் படங்களை அவர்கள் உடனடியாக சிடியாக மாற்றியும், செல்போன்களில் ஏற்றிக் கொடுத்தும், இணைய தளங்களில் பதிந்தும் பணம் ஈட்டி விடுகின்றனர்.

இந்தக் கொடுஞ்செயல் பற்றி விரிவாக...

பெண்களைத் தெய்வமாக மதித்துப் போற்றும் நமது நாட்டில்தான் இப்படிப்பட்ட வக்கிரச் செயல்களை செய்யும் பெண் பித்தர்களும் உள்ளனர்.

கேமராவுடன் உள்ள அலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடும் பெண்களை அவர்கள் அறியா வண்ணம் சமயம் பார்த்து ஆபாசமாகப் படம் பிடிக்கும் குறு மனம் படைத்தோரும் இங்கே உள்ளனர்.

அப்பாவிப் பெண்களைத் துகிலுரித்துப் பார்க்கத் துடிக்கும் ஆண் வக்கிரர்களின் கொடு மனம், தங்களின் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்ள எந்த அளவுக்குக் கீழ்த்தரமான காரியங்களையும் செய்யத் துணியும் என்பது உண்மைதான் போல.

பெண்கள் குளிப்பதை அவர்கள் அறியா வண்ணம் ஒளிந்து இருந்து பார்க்கத் துடிக்கும் பென்பித்தர்களை நாம் பார்த்து இருப்போம், அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டு இருப்போம்.

ஆனால் பெண்கள் கழிப்பறைக்குள் வீடியோ கேமரா வைத்து படம் பிடித்து பார்க்கத் துடிக்கும் கொடூரர்கள் பற்றிக் கேள்விப் படும் போது இதயம் பதறுகிறது.

நெடுந்தொலைவு பயணம் செய்யும் போது பெரும்பாலான மக்கள் பேருந்துப் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு பேருந்துப் பயணம் செய்யும் போது அந்தப் பேருந்துகள் ஊருக்கு வெளிப்புறங்களில் உள்ள உணவங்களில் நிறுத்தப் படுகின்றன அல்லவா?

பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் அக்தகைய உணவங்களில் உள்ள கழிவறையைப் பயன் படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

அப்படிப்பட்ட உணவகங்களில் உள்ள கழிவறைகளில் வீடியோ கேமராக்களை மறைத்து வைத்து விடுகின்றனர் இந்தக் கோணல் புத்திக்காரர்கள்.

கழிவறைகளின் மேலே உள்ளே விளக்குகிலோ அல்லது சுவற்றில் இருக்கும் குழாயிலோ அல்லது கழிவறையின் கதவிலோ இந்த வீடியோக் கேமராக்களைப் பொருத்தி விடுகின்றனர் இந்தக் கொடூரர்கள்.

இந்தப் படு பாதக சதிச் செயலைப் பற்றி ஏதும் அறியாமல் பேருந்தில் வந்த பெண்கள் தங்கள் இயற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்ள அந்தக் கழிவறையை பயன்படுத்தி விடுகின்றனர்.

அங்கே மறைத்து வைக்கப் பட்டு இருக்கும் கேமராக்கள் மூலமாக அந்தப் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்த அந்தக் கும்பல் அதனை உடனே குறுந்தகடுக்கு மாற்றி விற்று விடுகின்றனர்.

பெண் பித்தும், பணத்தாசையும் பிடித்த இந்தக் கொடுரக் கூட்டம் பெண்களின் ஆபாச வீடியோவை சிடியாக மாற்றுவதோடு நின்று விடாமல் அதை இணையம்வரை கொண்டு சென்றும் பணம் பார்த்து விடுகின்றனர்.

கழிவறைக்குள் வைத்து திருட்டுத் தனமாக படம் பிடிக்கப் படும் இந்த ஆபாசக் காட்சிகளை எந்த அருவருப்பும் இல்லாமல் பார்த்து ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருப்பது அதை விட வேதனையான விஷயம்.

இந்த ஆபாசக் காட்சிகளை தங்கள் அலைபேசிகளில் ஏற்றிக் கொண்டு அதைப் பார்த்து ரசிக்கும் ஒரு கூட்டமும் இருக்கிறது.

இப்படிக் கூட அசிங்கமான காரியங்களில் ஈடுபடுவார்களா என்று நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இந்த அவலச் செயல் எப்படிக் கண்டு பிடிக்கப் பட்டது என்றால்,

திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் கார்ப்பரேஷன் பாத்ரூமில் ஓணம் பண்டிகைக்கு பாத்ரூமை வெள்ளை அடித்து சுத்தம் செய்யும்போது பெண்கள் பாத்ரூமில் 9 இடத்தில் கேமரா இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

கேமராவை கழிவறையின் மேலே தொங்கும் மின்விளக்கில் பொருத்தி படம் பிடித்து வந்து உள்ளனர்.

இதை அறிந்த கேரளா பிரஜா என்ற பெண்கள் அமைப்பினர் அந்தக் கழிவறையைப் பூட்டி பெரும் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் ஏற்படுத்திய அந்தப் பரபரப்பினால் தான் இக்தகைய ஒரு கொடுஞ்செயல்
வெளியில் தெரிய வந்து உள்ளது.

அந்தப் பேருந்து நிலையக் கழிவறையை ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கான பெண்கள் பயன் படுத்தி வரும் நிலையில் இந்த வக்கிரர்கள் யார் யாரை எல்லாம் படம் பிடித்து உள்ளனரோ என்ற கவலை பலர் மனதில் ஏற்பட்டு உள்ளது.

இது கேரளாவில் தானே நடந்தது என்று நாம் சாதாரணமாக எண்ணிக் கொள்ளக் கூடாது, இந்தப் பேருந்து நிலைய சம்பவம் நமக்கு ஒரு உதாரணம்தான், அங்கே செய்தவர்கள் அகப் பட்டுக் கொண்டார்கள், இன்னும் அகப்படாதோர் எத்தனையோ.

நாகர்கோவிலில் ஒரு துணிக்கடையில் இது போலக் கழிவறையில் கேமரா வைத்துப் படம் பிடிக்கப் பட்ட சம்பவம் வெளியில் தெரிந்து பரபரப்பை ஏற்படுத்த வில்லையா?

இது போல இன்னும் எத்தனை இடங்களில் எத்தனை வக்கிரர்கள் இந்த செயலை செய்து வருகின்றனரோ?
எத்தனை அப்பாவிப் பெண்களின் அந்தரங்கங்கள் கொடூரர்களின் கண்களுக்கு விருந்தாக்கப் பட்டதோ?
இந்தப் படு பாதக செயல்களுக்கு யார் யார் உடந்தையாக இருக்கின்றனரோ?
தெரியவில்லை.

இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து நாம் போராடுகிறோமோ இல்லையோ குறைந்த பட்சம் நாமோ நமது குடும்பத்துப் பெண்களோ இது போல போது இடங்களில் உள்ள கழிவறைகளைப் பயன் படுத்துவதை அறவே தவிர்த்து விடலாம் அல்லவா?.

அப்படியே அந்தக் கழிவறையைப் பயன் படுத்த வேண்டிய காட்டாய சூழல் என்றாலும் கூட இது போன்ற வக்கிரங்கள் எதுவும் கழிவறையினுள் இருக்கின்றனவா என்பதை சோதித்து நமது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு பின்னர் பயன்படுத்தலாம் அல்லவா?.

அதற்காக எல்லோரையும் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம்................

ஆதாரம்: 12-10-2008 தேதியிட்ட நக்கீரன் இதழ்
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP