விடுதலை புலிகளுக்கு அமேரிக்காவுடனான தொடர்பு அம்பலம்!!!
>> Thursday, August 13, 2009
அமெரிக்க அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடித் தொடர்புகள் காணப்பட்டதாக குமரன் பத்மநாதன் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். அண்மையில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்தத் தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. நடைபெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது புலி ஆதரவாளர்கள் பரக் ஒபாமாவிற்கு ஆதரவாக செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாக கே.பி. குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். source:அதிர்வு
குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்ட விதம் சர்வதேச சட்டங்களுக்கு முரணானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment