செக்ஸ் வெப்சைட் தெரிவித்தால் பரிசு
>> Wednesday, December 9, 2009
பெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களைக் கெடுக்கும் செக்ஸ் வெப்சைட்களை காட்டிக் கொடுத்தால் அதிகபட்சம் ரூ.68,000 பரிசு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் இன்டர்நெட் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இளைஞர்கள், மாணவ &மாணவிகள் சைபர் கபேக்களிலும், செல்போன்களிலும் அதிக நேரம் இன்டர்நெட் பார்க்கின்றனர். அவற்றில் பெரும்பாலோர் செக்ஸ் வெப்சைட்களை பார்ப்பதாக தெரிய வந்தது.எனவே, செக்ஸ் வெப்சைட்களை பார்க்கும் இளைஞர்கள் மூலமாகவே அந்த சைட்களை தடை செய்ய திட்டமிட்டனர். வெப்சைட்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.7,000 முதல் ரூ.68,000 வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் 500 போன் அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். source:dinakaran செக்ஸ் வெப்சைட் தெரிவித்தால் பரிசு
--
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment