சமீபத்திய பதிவுகள்

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்....

>> Tuesday, January 12, 2010


 

ஒரே டேட்டா – பல செல்கள்
எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யபப்பட்டிருக்கும்.
செல்களை இணைத்து தலைப்பை உருவாக்க எக்ஸெல் ஒர்க் புக் தயாரிக்கும் போது, ஏதேனும் ஒரு தலைப்பை முதலில் உருவாக்க விரும்புவோம். இதனை ஒரு செல்லில் உருவாக்குவதைக் காட்டிலும், பல செல்களை ஒன்றாக்கி அமைத்தால் பார்க்க எளிதாக இருக்கும். இவ்வாறு பல செல்களை ஒன்றாக ஆக்குவதே மெர்ஜிங் செல்ஸ் ("merging cells") என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முதலில் ஒன்றாக ஆக்கிட விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவதாக பார்மட்டிங் டூல்பார்(Formatting toolbar)  செல்ல வேண்டும். இங்கே Merge and Center என்று இருக்கும் பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இப்போது நாம் தேர்ந்தெடுத்த அனைத்து செல்களும் ஒன்றாகத் தெரியும். இதில் நாம் விரும்பும் தலைப்பினை டைப் செய்து அமைத்துக் கொள்ளலாம். 
நீளமான எண்ணை டைப் செய்திட எக்ஸெல் செல்களில் எண்களை டைப் செய்தால் அதன் வழக்கப்படி 15 இலக்கங்களுக்கு மேல் அது அனுமதிக்காது. அப்படி டைப் செய்தால் அவற்றைத் தன் பாணியில் வடிவமைத்து ஒரு சைபரைச் சேர்த்துவிடும். ஆனால் நமக்கு ஒரு கிரெடிட் கார்டு அல்லது வங்கி அட்டை எண் போல பல இலக்கங்கள் அடங்கிய எண் வேண்டுமென்றால் என்ன செய்திடலாம். எண்ணுக்கு முன்னால் ஒரு ஒற்றை மேற்கோள் குறியைப் (apostrophe)  போட்டு டைப் செய்திடவும். 
சில சுருக்கு வழிகள்
Ctrl1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம்F2செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும். 
CtrlPage Up:  ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். 
CtrlPage Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம். 
CtrlShift":  இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். 
Ctrl': இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். 
CtrlR: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும். 
CtrlD: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து கீழே உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும். 
Ctrl': செல்லின் மதிப்பு மற்றும் அதன் பார்முலாக்களை மாற்றி மாற்றி காட்ட இந்த சுருக்கு வழியைப் பயன்படுத்தலாம். 
Ctrl$:  கரன்சி மதிப்பை இரண்டு தசம ஸ்தானங்களுக்கு தரும் வகையில் பார்மட் செய்திட இந்த சுருக்கு வழி பயன்படுகிறது.மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி சொல்யூசன்ஸ்
விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளுக்கான பாதுகாப்பு வளையம் தரும் பைல்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்ற செப்டம்பர் மாதம் இது பன்னாட்டளவில் தரப்பட்டது. தற்போது இந்தியாவில் பதிவு செய்த பயனாளர்களுக்கு மட்டும் இது இலவசமாகத் தரப்படுகிறது. இந்த தொகுப்பில் ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி மால்வேர் மற்றும் ஆண்ட்டி ஸ்பைவேர் என மூன்று வகையான பாதுகாப்பு தரப்படுகிறது. கட்டணம் செலுத்தி மைக்ரோசாப்ட் இயக்கத் தொகுப்பினைப் பெற்று, பதிவு செய்து இயக்குபவர்களுக்கு மட்டும் இந்த பாதுகாப்பு பைல்கள் கிடைக்கும். இந்த பாதுகாப்பு தரும் பைல்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அப்டேட் செய்யப்படும். இன்டர்நெட் இணைப்பில் சிஸ்டம் இருக்கையில் இவை வேலிடேட் செய்யப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. 
இந்தியாவில் பிஷ்ஷிங் புரோகிராம்கள் மூலம் பலர் பாதிக்கப்படுவதால், இத்தகைய பாதுகாப்பு வளையங்கள் அடங்கிய புரோகிராம்கள் அவசியம் தேவைப்படுகின்றன. எனவே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இவற்றைத் தருகின்றோம் என்று மைக்ரோசாப்ட் நுகர்வோர் பாதுகாப்பு நிர்வாகி ஸ்ரீவத்சவா கூறினார்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

1 கருத்துரைகள்:

RADAAN January 12, 2010 at 5:43 AM  

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP