ஆண் வயிற்றில் குழந்தை .இந்த மாதம் 'டெலிவரி!'
>> Friday, February 19, 2010
லண்டன்: கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு ஆண் விரைவில் குழந்தை பெறப் போகிறார்.அமெரிக்கா, ஓரிகான் மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன் பீட்டில் என்ற ஒரு ஆணுக்கு, குழந்தை பிறந்தது. அவரை அடுத்து தற்போது, கலிபோர்னியா மாநிலத்தில், ஸ்காட் மூர் என்ற ஆண், கர்ப்படைந்துள்ளார்.பெண்ணாகப் பிறந்து, லாரா என்ற பெயருடன் இருந்த ஸ்காட் மூர், சில ஆண்டுகளுக்கு முன் ஆணாக மாற விரும்பி, அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
எனினும், உடலில் பெண்ணுக்கான உள்ளுறுப்புகள் எதுவும் நீக்கப்படவில்லை. இவரைப் போலவே தாமஸ் என்பவரும், பெண்ணாகப் பிறந்து, ஆணாக மாறினார். ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவரும், 2007ல் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.இவர்களில் ஸ்காட் மூருக்கு, உடல் உள் உறுப்புகள், பெண்ணுக்கு இருப்பது போலவே உள்ளதால், செயற்கை கருவூட்டல் முறையில், கடந்த ஜூனில், மகப்பேறு கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, ஸ்காட் மூர் வயிற்றில் குழந்தை வளர்கிறது.இந்த மாதம், அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது.இது குறித்து, ஸ்காட் மூர் கூறுகையில், ""நாங்கள் இருவரும், ஆவலுடன் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். மிக மகிழ்ச்சியாக உள்ளது. நான் கருவுற்ற செய்தியை முதன்முதலில் கேட்டதும், உச்சகட்ட மகிழ்ச்சியாக, "ஷாப்பிங்' செய்தோம்,'' என்றார்.இச்செய்தியை, பிரிட்டனிலிருந்து வெளியாகும், "டெய்லி மெயில்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment