சமீபத்திய பதிவுகள்

மீண்டும் உருவாக்கப்படும் மனிதப் புதைகுழிகள்

>> Saturday, February 20, 2010

  - வவுனியவில் கொத்து கொத்தாக உடல்கள் புதைப்பு - அச்சத்தில் தமிழர்கள்.

வவுனியா புறநகர்ப்பகுதியில் கொத்துக் கொத்தாக தமிழர்களது உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றது. வவுனியா செட்டிக்குளத்திற்கு அண்மையாக உள்ள பகுதியில் உள்ள சுடுகாட்டில் தினமும் 50,100 உடல்கள் கொண்டுவரப்பட்டு மண் அகழும் பாரிய இயந்திரங்கள்(பெக்கோ) மூலம் குழிகள் தோண்டப்பட்டு ஒன்றாகப் போட்டு புதைக்கப்படுவதாக  நேர்கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.  

இவ்வாறு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இராணுவத்தினரால் கொண்டுவரப்படும் உடல்கள் புதைக்கப்படுவதை அடுத்து வவுனியாவில் பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மக்களிடம் விசாரணை நடாத்திவருவதாகவும் தெரியவருகின்றது.

முள்ளிவாய்க் கால் பகுதியில் கடந்த மே மாதம் தமிழரின் வாழ்வு, கலை, கலாச்சாராம், பண்பாடு, சிதைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதை அடுத்து சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த பல இலட்சக்கணக்கிலான மக்கள் முட்கம்பி வதைமுகாமில் சிறை வைக்கப்பட்டும் சரணடைந்த போராளிகள், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சுமார் பதினோராயிரத்திற்கு மேற்பட்டோர்கள் சிறப்பு தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ள நிலையில் அண்மை நாட்களாக வவுனியா புறநகர் பகுதியில் கொத்து கொத்தாக உடல்கள் புதைக்கப்பட்டு வருவதை அடு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

எதுவித தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் சிறப்பு முகாம் என்ற போர்வையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பதினோராயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளது குடும்பத்தவர்கள், உறவினர்கள் இதனால் மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். தமது உறவுகளது நிலை தெரியாது இருக்கும் நிலையில் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என பரிதவித்துக் கொண்டுள்ளனர்.

மகிந்த ராசபக்ச மீண்டும் சிறிலங்காவின் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தமிழர்களது நிலை அச்சத்திற்குரியதாக இருந்து வந்த நிலையில் கொடிய இராணுவத்தின் பிடியில் சிக்கி இருக்கும் தமிழர்களது நிலை என்னவாகும் என்பதை வெளிப்படுத்துவதாகவே இச் சம்பவங்கள் அமைந்துள்ளன.

தமிழர்கள் நாதியற்று கொல்லப்பட்டு புதைகுழிகளுக்குள் மூடப்பட்டுவரும் நிலையில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் தத்தமது பதவி சுகங்களுக்காக கொள்கைகளையே மறந்து செயற்பட்டு வருகின்றனர். தமிழீழ தேசியத் தலைமையினையும் தேசியம் தன்னாட்சி சுயநிர்ணய உரிமை போன்ற தமிழர்களது அடிப்படை நிலைப்பாட்டிற்கு விரோதமாக யார் செயற்பட்டாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதனை தடம் மாறுபவர்கள் விளங்கிக் கொண்டால் சரி.

இப்போது அனுபவிக்கும் பதவி பவுசு எல்லாம் எமது மக்கள் வழங்கிய அங்கீகாரத்தினால்தான் சாத்தியப்பட்டது என்பதனை உணர்ந்து கொள்வதுடன் ஆனந்த சங்கரிகளையும் சித்தார்த்தன்களையும் பிள்ளையான்களையும் கருனாக்களையும் டக்ளசுகளையும் எதற்குமே பயன்படாதவர்களாக மாற்றியவர்களும் இந்த மக்கள்தான் என்பதனையும் இவர்கள் உணர்வார்களா......? ஈழவிடுதலைப்பயணத்தில் இன்னும் எத்தனை துரோகிகளை சந்திகவேண்டுமோ......? 


source:eeladhesam
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP