303 ரன்கள்: சச்சின் அதிரடி
>> Monday, March 29, 2010
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல்வேறு உலக சாதனைகளை படைத்த தெண்டுல்கர் தற்போது ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடி வருகிறார். 20 ஓவர் போட்டிக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு அதிரடியாக அவர் விளையாடி வருகிறார். source:nakkheeran
தெண்டுல்கர் 6 ஆட்டத்தில் விளையாடி 303 ரன்கள் (208 பந்து) குவித்து 2-வது இடத்தில் உள்ளார். இதில் 4 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 72 ரன் எடுத்து உள்ளார். ஒரு ஆட்டத்தில் அவுட்இல்லை என்பதால் சராசரி 60.60 ஆகும். ஸ்டிரைக் ரேட் 145.67.
பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் வீரர் காலிஸ் 6 ஆட்டத்தில் 310 ரன்கள் (242 பந்து) குவித்து முதலிடத்தில் உள்ளார். 3 அரை சதம் அடித்துள்ளார். அதிகபட்ச ரன் 89. 4 ஆட்டத்தில் அவுட் ஆகாததால் சராசரி 155 ஆகும். ஸ்டிரைக் ரேட் 128.09.
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யூசுப்பதான் 7 ஆட்டத்தில் விளையாடி (139 பந்து) 250 ரன் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். அவர் ஒருவரே சதம் அடித்து உள்ளார். ஸ்டிரைக் ரேட் 179.85 ஆகும்.
ஹைடன் (சென்னை சூப்பர்கிங்ஸ்) 215 ரன்னும், ஷேவாக் (டெல்லி) 198 ரன்னும், ரவி போபரா (பஞ்சாப்) 197 ரன்னும், ரெய்னா (சென்னை) 194 ரன்னும் எடுத்துள்ளனர்
--
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment