சமீபத்திய பதிவுகள்

அன்பான தமிழ்பேசும் உறவுகளே,

>> Friday, May 14, 2010

 


அன்பான தமிழ்பேசும் உறவுகளே,
மே 18 , சிங்கள அரசும் அதற்கு உறுதுணையாகவிருந்த வல்லரசுகளும் எமது தாயக உறவுகள் மேல் கொடும்போர் தொடுத்து நிகழ்த்திய இனப் படுகொலையின் ஓராண்டு நிறைவடைகிறது. மூங்கிலாறு, உடையார்கட்டு, வள்ளிபுனம் என்று தொடர்ந்து, புதுமாத்தளன், வலைஞர்மடம், முள்ளியவளை என்று நடந்து முடிந்த கோரத்தாண்டவத்தில் கொத்துக் கொத்தாகவும் குடும்பம் குடும்பமாகவும் எமது மக்கள் வேட்டையாடப்பட்டார்கள். இன்னொரு புறத்திலே தமிழர் படையின் வீரம் செறிந்த போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. அளிவிட முடியாத பெரும் படைப்பலத்துடனும் வல்லாதிக்க சக்திகளின் முழுமையான உதவியுடனும் எம்மினத்தைக் காவுகொள்ள வந்த சிங்களப் படையை எமது போராளிகள் தீரமுடன் எதிர்கொண்டு போராடினார்கள். மகத்தான தியாகங்களும் சாதனைகளும் இறுதிநேர யுத்தத்தில் படைக்கப்பட்டன.
இவ்வேளையில், கடந்த ஆண்டு நடந்த இனப்படுகொலையினதும் வீரமிகு போரினதும் பதிவுகளை புலிகளின் குரல் வானொலி மே 15,16,17,18 நாட்களில் சிறப்பு ஒலிபரப்பு ஊடாக தொகுக்க விரும்புகிறது. முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பாகவோ வீரமிகு போராட்டம் தொடர்பாகவோ ஆக்கங்கள், ஆவணங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரடி சாட்சிகளான பலர் இன்று மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்தோ அயல்நாடுகளில் தஞ்சமடைந்தோ இருக்கும் நிலையில், அவர்கள் தமது நினைவுப்பகிர்வுகளைப் புலிகளின்குரல் வானொலியின் வாயிலாக உங்கள் குரலில் உங்களின் உரிமைக்குரலை பதிவு செய்யவுள்ளோம்.


கிழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உங்கள் பெயர், தொலைபேசி இலக்கம் மற்றய விபரங்களை பதிவு செய்தால் நாம் மீண்டும் உங்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவோம்.
இந்த வரலாற்றுப் பணியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்து உலகப்பரப்பிற்கு எடுத்து சொல்லுங்கள் எங்களின் வீடுதலை தாகம் இன்னும் விழ்ந்துவிடவில்லையென்று.


படைப்புக்கள் கவிதைகள், பாடல்கள் என புலம்பெயர்ந்த, தமிழக, தாயக உறவுகள் உங்கள் படைப்புக்களையும் புலிகளின் குரல் வானொலிக்கு அனுப்பலாம்.

வேண்டிய மின்னஞ்சல் முகவரி: articles@pulikalinkural.com


source:http://www.pulikalinkural.com/--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP