சமீபத்திய பதிவுகள்

இந்த வார டவுண்லோட் - ரகசியத்தைக் காப்பாற்ற

>> Thursday, October 28, 2010


இணையம் வழி அனைத்து நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று நமக்குக் கிடைத்த வசதி சிறப்பான ஒன்று என்றாலும், அதில் உள்ள ஆபத்துக்களுக்கும் பஞ்சமில்லை. நாம் என்ன கீ போர்டில் அழுத்துகிறோம் என்று அறிந்து, அதனை அப்படியே மற்றவர்களுக்கு தெரிவிக்கும் ஸ்பைவேர்கள் ஆபத்து நாளொரு மேனியாக வளர்ந்து வருகிறது. இத்துடன் நம் கம்ப்யூட்டரில் நம்மை வேவு பார்க்கும் ஒரு புரோகிராம் கீ லாக்கர்களாகும். நாம் என்ன கீகளை அழுத்துகிறோம் என்பதனை அப்படியே ஒரு லாக் புக்காக அமைத்து, நம்மை வேவு பார்க்கும் நபர்களுக்கு பைலாக தெரிவிக்கும் கீ லாக்கர்கள் அதிகம் இயங்கி வருகின்றன.  இதிலிருந்து நம்மை பாதுகாக்க, நாம் அழுத்தும் கீகளை, கம்ப்யூட்டர்களில் உள்ள கீ லாக்கர்  புரோகிராம்கள் அறிந்து கொள்ள விடாமல் தடுக்க இணையத்தில் சில இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன.
இவற்றில் சிறந்ததாக  அண்மையில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதன் பெயர் KeyScrambler Personal. இதனைQFX Software  என்னும் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.  இது மிக அருமையாகச் செயல்படுகிறது. நாம் டைப் செய்கையில் கிடைக்கும் கீ ஸ்ட்ரோக்குகளைச் சுருக்கி மாற்றுகிறது. பின்னர், பிரவுசர்களுக்கு அவற்றை எடுத்துச் சென்று, அங்கு ஒரிஜினல் கீகளாக மாற்றித் தருகிறது. இதனால், கீ லாக்கர்கள்   எந்த கீகள் அழுத்தப்பட்டன  என அறிவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த கீ லாக்கர்களுக்கு, சுருக்கப்பட்ட என்கிரிப்டட் சிக்னல்கள் தான் கிடைக்கும். அதனை மற்றவர்கள் அறிய முடியாது. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிளாக் ஆகிய பிரவுசர்களுக்கான  KeyScrambler Personal   தொகுப்பு இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. மற்ற பிரவுசர்கள் மற்றும் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களுக்கு வேண்டும் என்றால், கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மேலும் இது விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டுமே இயங்குகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி https://addons. mozilla.org/enUS/firefox/addon/3383/

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

மாடல் அழகியின் நிர்வாண யோகா காட்சியால் பரபரப்பு

 
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த மாடல் அழகி சாராஜுன் நிர்வாணத்துடன் யோகா செய்வது போன்ற வீடியோ பட காட்சி பிளேபாய் இணைய தளத்தில் வெளியானது.
 
இதற்கு அங்குள்ள இந்து மத தலைவர் ராஜன்செட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
அவர் கூறும்போது, இந்துக்கள் அனைவரும் யோகாசனத்தை தெய்வீக கலையாக மதித்து வருகிறார்கள். அதனை மாடல் அழகி சாராஜுன் நிர்வாணமாக செய்து அவமதித்துள்ளார்.
 
யோகா உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தரக்கூடியது. அந்த கலையை அவமதிப்பதை இந்துக்கள் ஒருபோதும் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்றார்

source:maalaimalar


 

StumbleUpon.com Read more...

onlinepj.com-பி.ஜெய்னூல் ஆபிதீன் புதிய தளம் ஆரம்பம்

 

கிறிஸ்தவத்திற்கு பதில்: பீஜேயின் புதிய தளம் ஆரம்பம்

முன்னுரை:

பீஜே அவர்களின் அதிகார பூர்வமான தளமாகிய ஆன்லைன் பீஜே தளத்தில், கிறிஸ்தவர்களுக்கு பதில் தருவதற்காக ஒரு புதிய தளத்தை ஆரம்பித்துள்ளதாக பீஜே அவர்கள் பிரகடனம் செய்துள்ளார்கள். அந்த புதிய தளத்திற்கு "ஏசு அழைக்கிறார்"  என்று பெயரை சூட்டியுள்ளார்.

இந்த கட்டுரையில் கீழ்கண்ட விவரங்கள் பற்றி நான் எழுதப்போகிறேன்.

1. பீஜே அவர்களின் புதிய தள அறிமுகம்
2. பீஜே அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி
3. பீஜே அவர்களின் புதிய தளத்தில் நாம் எதிர்பார்க்கும் விவரங்கள்
4. எழுத்து விவாதத்திற்கு பீஜே அவர்கள் இப்போது தயாரா?
5. முடிவுரை
--------------------------------------------------------------------------------

1. பீஜே அவர்களின் புதிய தள அறிமுகம்

பீஜே அவர்கள் "கிறிஸ்தவத்திற்கு மட்டும் பதில் தருவதற்கு" மட்டுமே ஒரு தளத்தை ஆரம்பித்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ஒன்று உண்டு என்றால், இஸ்லாமியர்கள் அதிகமாக எழுதுவதும்/பேசுவதுமேயாகும்.  முக்கியமாக, கிறிஸ்தவத்திற்கு பதில் என்றுச் சொல்லி ஒரு தளம் அதுவும் தமிழில் பீஜே அவர்கள் ஆரம்பித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம். இதற்காக நான் பீஜே அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சரி, பீஜே அவர்கள் தங்கள் புதிய தளம் பற்றி எப்படி அறிமுகம் செய்கின்றார் என்பதை இப்போது படிப்போம்.


சோதனை ஓட்டம் ஆரம்பம்

•         இஸ்லாத்துக்கு எதிராக கிறித்தவ உலகம் எழுப்பும் கேள்விகளூக்கும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் தக்க பதில் அளிக்கவும், கிறித்தவத்தின் பொய்மையை உலகுக்கு உணர்த்தவும் இணைய தளம் சோதனை ஓட்டம் ஆரம்பம். jesusinvites.com. விரைவில் முழுமையான ஒளிபரப்பு செயல்படும் இன்ஷா அல்லாஹ். உங்களின் ஆலோசனைகள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. kaliltntj@gmail.com மற்றும் admin.jesusinvites@gmail.com என்ற முகவரிகளுக்கு அனுப்பி உதவுங்கள். . . .



அதாவது, இரண்டு காரணங்களுக்காக இந்த தளத்தை ஆரம்பிப்பதாக கூறுகிறார்.

1) இஸ்லாத்துக்கு எதிராக கிறித்தவ உலகம் எழுப்பும் கேள்விகளூக்கும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் தக்க பதில் அளிக்கவும்
2) கிறித்தவத்தின் பொய்மையை உலகுக்கு உணர்த்தவும்

மேலே குறிப்பிட்ட இரண்டு காரணங்களில், இரண்டாவது காரணம் பற்றி அதிகமாக எழுதுவார் என்று எனக்குத் தெரியும், அதாவது முஹம்மதுவைப் போல மார்க்கத்தின் பெயரை வைத்துக்கொண்டு அட்டூழியங்களைச் செய்த (அ) செய்துக்கொண்டு இருக்கும் ஒரு சில கிறிஸ்தவ பாதிரியார்கள் பற்றி எழுதுவார் என்று எனக்கு நன்றாகத்  தெரியும் ஆனால், முதல் காரணத்தை நிறைவேற்றுவாரா? நாம் கேட்கும் அல்லது இதுவரை கேட்டு இருக்கும் கேள்விகளுக்கு பதிலைத் தருவாரா? என்பதை நாம் பொருத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

இப்போதைக்கு, அவரது வாக்குக்களை அப்படியே நம்பி, இந்த புதிய தளத்தை எல்லாரும் வரவேற்போம்.

உமராகிய நான் மன மகிழ்ச்சியோடு, பீஜே அவர்களின் புதிய தளத்தை கிறிஸ்தவ உலகிற்கு அறிமுகம் செய்கின்றேன். 

தளத்தின் பெயர்: ஏசு அழைக்கிறார் (jesusinvites.com)
நோக்கம்: கிறிஸ்தவர்கள் இஸ்லாம் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலைத் தருவது, மற்றும் கிறிஸ்தவம் பற்றிய உண்மைகளை உலகிற்கு தெரிவிப்பது.
த‌ள‌ நிர்வாகி அல்ல‌து ஆசிரிய‌ர்: திரு பீஜே அவ‌ர்க‌ள்


2 பீஜே அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

பீஜே அவர்கள் இந்த ஆண்டின் முதல் மாதத்தில், என்னை நேரடிவிவாதத்திற்கு அழைத்தார், நான் மறுத்தேன், எழுத்துவிவாதத்தை மட்டுமே நான் ஒப்புக்கொள்வேன் என்றேன். இதற்கு பீஜே அவர்கள் கீழ்கண்டவாறு இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூறினார்:


பீஜே அவர்கள் எழுதியது

இந்த இடத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது.
முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாம் குறித்து விமர்சனம் செய்தால் அவர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டும். முகவரியோடு விமர்சித்தால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நாமும் சில கேள்விகள் கேட்க வேண்டும். முகவரி இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல் பெட்டையைப் போல் ஒளிந்து கொண்டு எதையாவ்து எழுதினால் எழுத்துவதற்கு பதில் கொடுக்காமல் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.

தன்னுடைய இன்னொரு கட்டுரையில் எனக்கு நெருக்கடியை உண்டாக்கும் படி(நேரடி விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்று) அறிவுரை கூறினார்.

பீஜே அவர்கள் எழுதியவை:

இந்த அழைப்பை அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்குங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் எங்கே தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தால் நான் சென்று விவாத ஒப்பந்தம் செய்யத் தயார். இதை அவர்களுக்குத் தெரிவித்து வலியுறுத்துங்கள். கிறித்தவ நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்கள் மூலமாகவும் நெருக்கடியை ஏற்படுத்துங்கள்

Sources: 


ஆனால், நான் அப்போதே அவருக்கு  பதில்  எழுதினேன், நெருக்கடி எனக்கு அல்ல உங்களுக்குத் தான், மற்றும் இஸ்லாமியர்களுக்கு நீங்கள் சொன்ன அறிவுரையை அவர்கள் நிறைவேற்றுவார்கள், ஆனால் நீங்கள் மட்டும் அதை பின்பற்றப்போவதில்லை, இப்போது தான் வருடம் ஆரம்பித்தது, இவ்வருட முடிவிற்குள் ஒரு முடிவு தெரியவரும் என்று எழுதினேன், அதே போல, பீஜே அவர்கள் கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு தக்க பதில் அளிக்கப்படும் என்றுச் சொல்லி தளத்தை ஆரம்பித்துள்ளார்.

2010 ஜனவரி மாதம் நான் கொடுத்த பதிலை கீழே படிக்கவும்:

உமர் எழுதியது: 

2007ம் ஆண்டிலிருந்து என் எழுத்து விவாத அழைப்பு பரவலாக இணையத்தில் இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நெருக்கடியை எங்கள் கட்டுரைகள் உருவாக்கியிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது. 

….தமிழ் கிற்ஸ்தவர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் விமர்சனங்களை படித்துள்ளார்கள், அதுபோல கிறிஸ்தவ பதில்களையும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாம் பற்றி ஓரளவிற்கு அவர்களுக்கு புரிந்துவிட்டது, எனவே, யாரும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியாது. …


ஈஸா குர்ஆன்

இப்போது தான் எனக்கு புரிந்துள்ளது, நாங்கள் அடித்துக்கொண்டு இருக்கின்ற இடம் சரியான இடம் தான் என்று. 
எங்கள் கட்டுரைகளுக்கு பதிலைத் தராதீர்கள் என்று மற்ற இஸ்லாமியர்களுக்கு எந்த ஆலோசனை கொடுத்தீர்களோ.. அந்த ஆலோசனையை நீங்களே முறித்துவிட்டு, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களின் இதே தளத்தில் பதிலைத் தரும் காலம் மிக சமீபமாக உள்ளது.

உங்களின் ஆலோசனையை மற்றவர்கள் பின்பற்றக்கூடும், ஆனால், நீங்கள் அதனை முறித்துவிடும் காலம் வருகிறது....

கேளுங்கள் பீஜே அவர்களே... 

கேள்விகளை கேளுங்கள்... 

எதை வேண்டுமானாலும் கேளுங்கள்... 

ஆனால், ஜாக்கிரதை....... 

நீங்கள் பின்பற்றுவது குர்ஆனை... முஹம்மதுவை... அவர் நடந்துக்கொண்ட விதத்தை...

என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 

முடிவுரை: 

ஆக, பீஜே அவர்கள் எழுத்து விவாதத்திற்கு வரமாட்டார்கள். எங்கள் இஸ்லாமிய கட்டுரைகளுக்கு பதில்களைத் தராதீரகள் என்று அறிவுரை கூறியுள்ளார்கள். இந்த அறிவுரையை இவர் பின்பற்ற முடியுமா... காலம் தான் பதில் சொல்லும்... இப்போது தான் 2010 ஆண்டு ஆரம்பித்துள்ளது... இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்... 

நான் அடிக்கடி எழுதுவதுண்டு "இஸ்லாமியர்களை பேசவிடுங்கள்... இஸ்லாமை விளக்க விடுங்கள்... அவர்கள் அதிகமாக பேச வேண்டும் எழுதவேண்டும், அப்போது தான் நமக்கு எழுத வாய்ப்பு கிடைக்கும்". 

ஆக, நான் சொல்லியது போலவே, பீஜே அவர்கள் எங்கள் கேள்விகளுக்கு தக்க பதில்களை தருவதாக கூறியுள்ளார், பாவம் எவ்வளவு நெருக்கடியோ... நேரடி விவாதத்திற்கு தான் ஒப்புக்கொள்வேன் என்றுச் சொன்னவர், இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூறியவர்... இப்போது பதில் தரவந்துள்ளார்.   பீஜே அவர்களே! உங்களை வருக வருக என வரவேற்கிறேன். 

[பின் குறிப்பு: கிறிஸ்தவத்திற்கு தக்க பதில் தருவேன் என்றுச் சொல்லி, வெறும் இந்த பாதிரியார் இப்படி செய்தார்.. அந்த பாதிரியார் அப்படி செய்தார் என்று மட்டும் சொல்லிக்கொண்டு இருந்துவிட்டு, இஸ்லாம் பற்றி, முஹம்மது பற்றி, குர்‍ஆன் பற்றி நாங்கள் எழுப்பிய கேள்விகளை அப்படியே காற்றில் விட்டுவிடப்போகிறீர்கள்....]

"இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்" என்று நான் எழுதினேன், அதே போல, "உங்கள் புதிய தளம் இவ்வாண்டிற்குள் வந்தமைக்கு மிக்க நன்றி".  எல்லாரும் பீஜே அவர்களுக்கு ஒரு "ஓ"ப்போடுங்க....



3. பீஜே அவர்களின் புதிய தளத்தில் நாம் எதிர்பார்க்கும் விவரங்கள்

பீஜே அவர்கள் தன் தளத்தில் "கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு அவதூறுகளுக்கு தக்க பதில் தருவதாக" வாக்கு கொடுத்துள்ளார். ஆகையால், மற்ற இஸ்லாமிய தளம் போல அல்லாமல், தம்முடைய அதிகார பூரவமான தளத்தில் எழுதியது போல அல்லாமல் கீழ்கண்ட வழியில் நேர்மையாக நடந்துக்கொள்வார் என்று தமிழ் கிறிஸ்தவ உலகம்  அவரிடமிருந்து எதிர்ப்பார்க்கிறது.

1) எங்களுக்கு பதில் தரும் போது, எங்கள் வரிகளை பதிக்கும் போது, எங்கள் கட்டுரையின் தொடுப்பு என்ன என்று குறிப்பிட்டு பதில் தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.

2) அவருடைய புதிய தளத்தில் படிக்கப்போகும் வாசகர்கள் வெறும் இஸ்லாமியர்களாக மட்டும் இருக்கமாட்டாரக்ள், அவர்கள் அனைத்து தர மக்கள் இருப்பார்கள். எனவே, அவர் சொல்வது உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க, எங்கள் வரிகளை/கட்டுரைகளை மேற்கோள் காட்டி பதில் சொன்னால், நியாயமானதாக இருக்கும்.

3) இஸ்லாமியர்கள் நேர்மையாக நடந்துக்கொள்கிறார்கள் என்று மேடையில் சொல்வது மட்டுமல்ல, அதனை செயலில் காட்ட முஹம்மதுவை பின்பற்றுபவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

4) பீஜே அவர்களின் கட்டுரையை அவரது தளத்தில் படிக்கும் கிறிஸ்தவர்கள் அதற்கான பதிலை நாங்கள் கொடுத்து இருந்தால், அதனை (அ) அதன் தொடுப்பை  அவர்கள் தளத்தில் பின்னூட்டமிட அனுமதி அளிப்பார் என்று நம்புகிறேன், ஏன்னெறால், அப்போது தான் அவரது தளத்தில் படிக்கும் இஸ்லாமியர்களுக்கும் இரண்டு வாதங்களையும் படித்து சரி பார்க்கமுடியும்.

5) தங்கள் தளத்தில் படிக்கவரும் வாசகர்களை ஏமாற்றாமல் இருக்கவேண்டுமானால், நாங்கள் கொடுத்த பதிலின் தொடுப்பையும் கொடுக்கவேண்டும்.

6) உங்கள் தொடுப்பை நாங்கள் கொடுக்கமாட்டோம், நாங்கள் உங்கள் வரிகளை பதித்து எங்கள் பதிலை மட்டும் தருவோம் என்று இதர கோழையான இஸ்லாமிய தளங்கள் சொல்வது போல, பீஜே அவர்களும் சொல்வாரானால்... அவருக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இல்லை... அல்லது உண்மைக்கு முன்னால் இஸ்லாம் தோற்றுவிடும் என்று பயப்படுகிறார் என்று அர்த்தம். ஒரு தளத்தின் தரம், அந்த தளம் முன்வைக்கும் ஆதாரங்கள் மீது சார்ந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

7)  உங்கள் புதிய தளம் பற்றி நான் ஏன் கிறிஸ்தவர்களுக்கு அறிமுகம் செய்கின்றேன் என்றால், எனக்கு கிறிஸ்தவம் மீது நம்பிக்கை உண்டு, பைபிள் பற்றி நம்பிக்கை உண்டு, ஆகையால், பயப்படாமல் என் கட்டுரைகளில் யாருக்கு பதில் தருகிறேன், அந்த தளத்தின் தொடுப்பு என்ன என்று எழுதுகிறேன். அதே போல, நீங்களும் செய்வீர்கள் என்று தமிழ் கிறிஸ்தவ உலகம் நம்புகிறது.

8) இது எங்கள் எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்று நம்பிக்கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான படித்த அறிவுள்ள இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் இது தான். இரு தரப்பினரின் வாதம் படித்த பிறகு உண்மை தெரியவரும். இதனை பீஜே மறுக்கமாட்டார் என்று நம்புகிறேன்.

எனவே, பீஜே அவர்கள் தங்கள் தளத்தில் நேர்மையனவராக நடந்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு நாம் முன் செல்லலாம்.


4 எழுத்து விவாதத்திற்கு பீஜே அவர்கள் இப்போது தயாரா?

நான் எழுத்துவிவாதத்திற்கே வரமாட்டேன் என்று அடம்பிடித்தவர், முகவரி இல்லாமல் எழுதும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பதில் கூட‌  எழுதவேண்டாம் என்று சொன்னவர், வெறும் கேள்விகளை மட்டும் கேட்டுக்கொண்டே இருங்கள் என்றுச் சொன்னவர்,  இப்போது கிறிஸ்தவ கேள்விகளுக்கு தக்க பதில் தருவதாக சொல்லியுள்ளார்.

இனியாவது.. எழுத்து விவாதத்திற்கு வருவாரா?

அப்படி வருவதாக இருந்தால்.. கீழ்கண்ட கேள்விகளில் எந்த தலைப்பையும் தெரிந்தெடுத்துக்கொண்டு விவாத கட்டுரை எழுதினால் நான் பதில் தர தயாராக இருக்கிறேன்.

1) முஹம்மது ஒரு நபியா (தீர்க்கதரிசியா) VS   இயேசு இறைமகனா?

2) குர்‍ஆன் இறைவேதமா VS    பைபிள் இறைவேதமா?

3) வன்முறையை தூண்டுவது குர்‍ஆனா அல்லது பைபிளா?

4) முஹம்மது ஒரு பாவியா VS   இயேசு பரிசுத்தரா?

5) இஸ்லாமில் பெண்களின் நிலை VS கிறிஸ்தவத்தில் பெண்களின் நிலை

6) இஸ்லாமிய சொர்க்கம் VS கிறிஸ்தவ சொர்க்கம் 

7) மனிதர்கள் பின்பற்றத்தகுந்த மாமனிதர் முஹம்மதுவா? அல்லது கிறிஸ்துவா?

8) இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கமா VS கிறிஸ்தவம் ஒரு தீவிரவாத மார்க்கமா?


இவ்வளவு தான் தலைப்புகள் என்று எண்ணவேண்டாம்... வேறு தலைப்புக்களையும் நீங்கள் தெரிந்தெடுத்துக்கொள்ளலாம்.. ஆனால், இரண்டு பக்கமும் அதைப் பற்றி விவாதிக்கும் வண்ணம் அந்த தலைப்பு இருக்கவேண்டும்.  


5. முடிவுரை

பீஜே அவர்களின் புதிய தளத்தை பார்வையிட்டபோது, தற்கால கிறிஸ்தவ ஊழியர்களில் சிலர் செய்யும் அட்டூழியங்கள் பற்றி, பண கையாடல் பற்றி படங்களோடு எழுதியிருந்தார், நல்லது, இது பீஜே என்ற தனி மனிதருக்கு இருக்கும் உரிமை. இயேசுவின் அடியார்களில் ஒரு சிலர் செய்யும் அட்டகாசங்கள் பற்றி படங்கள் போட்டு எழுதியிருந்தார், அதே போல, அல்லாஹ்வின் அடியார்கள் (முஹம்மது மற்றும் இன்றுள்ள அடியார்கள்) செய்த‌/செய்யும் அட்டகாசங்களை படங்களோடு நாங்கள் எழுதினால் நீங்கள் மனம் வருந்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், சமத்துவம் பற்றி, சம உரிமை பற்றி அதிகம் பேசுபவர்கள் நீங்கள் என்பதால் இப்படி உங்களைப் பற்றி நாங்கள் நினைப்பது சரியாகத் தான் இருக்கும்.

பீஜே அவர்கள் எடுத்த முடிவு, மிகவும் உயர்ந்தது, அதாவது இஸ்லாம் பற்றி எழுத்து மூலமாக கிறிஸ்தவர்களுக்கு கேள்வி கேட்க/பதில்கள் தர முன்வந்திருப்பது அதிக ஆபத்தானது, இருந்தாலும் பீஜே வந்துள்ளார் என்றால் இதன் அறுவடையை நிச்சயமாக அறுப்பார்.

கடைசியாக, உங்களின் புதிய "இயேசு அழைக்கிறார்" தளத்தை வரவேற்று இந்த அறிமுக கட்டுரையை முடிக்கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் வாசகன் உமர்



 


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP