சமீபத்திய பதிவுகள்

எச்சரிக்கை:பென்டிரைவில் உள்ள தகவல்கள் திருடப்படுகின்றன

>> Tuesday, April 5, 2011

மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல் பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை எப்படி திருடுகின்றனர். இதை எவ்வாறு தடுப்பது.

மெமரி கார்டு, பென்டிரைவ் மற்றும் Portable Harddisk பற்றிய சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம். Secondary Storag…e Device என்று சொல்லக்கூடிய இந்த வகை Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது 0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும்.

இதில் சேமிக்கப்படும் எந்த தகவலும் அழிவதே இல்லை. எப்போது வேண்டுமானாலும் அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover செய்து பெற முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை.

ஆரம்ப காலத்தில் நாம் பயன்படுத்திய தகவல்களை கூட பெற முடியும். நம் மெமரி கார்டு அல்லது பென்டிரைவ் களை ரிப்பேர் செய்ய கொடுக்கும் போது அவர்கள் மெமரி கார்டை கணணியில் இணைத்ததும் மெமரி கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் அவர்களிடம் இருக்கும்.

மென்பொருள் துணை கொண்டு அந்த கணணியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும் இதற்கான எந்த அறிவிப்பும் அந்த கணணியின் திரையில் தெரியாது. கணணி பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம் ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.

வைரஸை நீக்க சில நிமிடங்கள் ஆகும் என்று சொல்வர். என்ன தான் நாம் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக Recover செய்து கொடுக்க பல மென்பொருள் உள்ளது. நாம் திரையை பார்த்து கொண்டு தான் இருப்போம்.

ஆனாலும் நம் மெமரி கார்டின் ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல் நேற்று வரை உள்ள அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும். உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டால் சிறந்த வைரஸ் நீக்கும் மென்பொருள் கொண்டு நாமே வைரஸை நீக்கலாம்.

வைரஸ் பாதித்த பின் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை சேமிக்க வேண்டுமானால் Start பொத்தானை RightClick செய்து Explore என்பதை சொடுக்கி வரும் திரையில் இடது பக்கத்தில் Memory Card க்கான டிரைவை தேர்ந்தெடுத்து நம் முக்கிய கோப்புகளை காப்பி செய்து நம் கணணியில் சேமிக்கலாம். எல்லாம் காப்பி செய்து முடித்த பின் Memory Card ஐ Format செய்து பயன்படுத்தலாம்.


source:


--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP