சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான, கனிமொழி ஜாமின் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, திகார் சிறையிலிருக்கும் மகளை சந்திப்பதற்காக, தி.மு.க., தலைவர் கருணாநிதி, இன்று காலை 8.30மணியளவில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டில்லி சென்றார்.
சுப்ரீம் கோர்ட்டில், கனிமொழியின் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் அறிந்த கருணாநிதி, மிகுந்த மனவேதனை அடைந்தார். முன்னாள் அமைச்சர்களை, கோபாலபுரம் வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். பின், சிறையிலிருக்கும் மகளை சந்திக்க டில்லி செல்ல முடிவு செய்தார். நேற்று, நிருபர்களை சந்திப்பதை தவிர்த்தார். கருணாநிதி, இன்று காலை, 8.30 மணிக்கு, ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் டில்லி சென்றார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, வேலு, கருணாநிதிபி.ஏ.சண்முகநாதன், தலைமையிடத்து செயலாளர்காஜாமொகைதீன் மற்றும் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பாண்டியன், வினோதன், கணேசன்,டாக்டர் பிரவீன் உதவியாளர் நத்தியானந்தம் உட்பட10 பேர் செல்கின்றனர்.
டில்லி செல்லும் கருணாநிதி, தனியார் ஓட்டலில் தங்குகிறார். திகார் சிறைக்கு சென்று, மகள் கனிமொழியை சந்தித்து பேச உள்ளார். மகளை வெளியில் கொண்டு வர, அடுத்து என்ன செய்வது என, சட்ட வல்லுனர்களை கலந்தாலோசிக்கவும் முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து பேச முடிவு செய்திருப்பதாகவும், அவர் திரும்பி வரும் தேதி முடிவாகாததால், ஓரிரு நாட்கள் டில்லியிலே தங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.
source:dinamalar
--
http://thamilislam.tk
0 கருத்துரைகள்:
Post a Comment