நிஜமானது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி:
>> Wednesday, November 2, 2011
மிகவும் ஏழ்மையான நிலையில் சேரி வாழ்க்கை வாழ்ந்து வந்த சுஷில் குமாருக்கு அவரது வீட்டில் சொந்தமாக தொலைக்காட்சி பெட்டி கூட இல்லையாம். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்ததை தொடர்ந்து, நிகழ்ச்சி ஒளிபரப்பாளர் அமிதாப் பச்சன், சுஷில் குமாரை வெற்றியாளராக அறிவித்ததுடன், அவரையும், அவரது மனைவியையும் அழைத்து, ரூ 50 மில்லியன் (ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல்) பரிசுத்தொகையை நேரடியாக கையளித்து அவர்களை பரவசப்படுத்தினார். நீங்கள் புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களது அர்ப்பணிப்பும், ஆர்வமும், இதுவரை உங்களை இந்நிகழ்ச்சியில் கொண்டு வந்துள்ளது என அமிதாப் பச்சன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் குமார் பங்குபெற்ற முன்னர், அவரது மாத சம்பளம் டாலர் மதிப்பில் 120 அமெரிக்க டாலர்களே! பீஹார் மாநிலத்தின் மொதிஹாரியில் சின்னதாக ஒரு தனியார் வகுப்பு நடத்தி வருவதால் கொஞ்சம் மேலதிக வருமானம் வந்துள்ளது. மற்றும் படி அரசு உத்தியோகம் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கு பற்றுவதைக்கூட அவரது குடும்பத்தினர் பக்கத்துவீட்டு டீவியில் தான் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சியின் முதல் சுற்றுக்களில் அவர் சரியான பதில்களை டிக் செய்ய, செய்ய அவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுமாறு நெருங்கியவர்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறார்.
இந்த பணத்தை வைத்து என்னென்ன செய்வதற்கு அவர் திட்டமிட்டிருக்கிறீர்கள் என நிருபர்கள் கேட்ட போது, இந்திய சிவில் சேர்விஸ் பரீட்சை எழுத வேண்டும். அதற்கான பயிற்சிகளுக்காக சில பணம் செலவிடுவேன். இப்பரீட்சை மூலம், மிக பாதுகாப்பானதும், பெறுமதியானதுமான நிரந்தர தொழிலொன்று எனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றார். மனைவிக்காக புதிய வீடு ஒன்று வாங்குவேன். பெற்றோருக்கு தேவையான பணம் வழங்குவேன். சகோதரர் சிறிய வர்த்தகமொன்றை தொடக்க மூலதனமாக கொஞ்சம் பணம் வழங்குவேன் என தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக பேசத்தொடங்கிய குமார், தனது சொந்த ஊரான மோதிஹாரியில், ஒரு நூலகம் கட்டப்போவதாகவும் இதன் மூலம் அந்த ஊரில் உள்ள சிறார்கள் தங்கள் கல்வி அறிவை பெருக்கி கொள்ளலாம் எனவும் இறுதியாக தெரிவித்த போது, சரியானவருக்கு தான் பரிசு சென்றடைந்திருக்கிறது என எண்ணத்தோன்றுகிறது.
http://thamilislam.tk
0 கருத்துரைகள்:
Post a Comment