இந்தியாவில் காதல் சின்னமாக திகழும் தாஜ்மஹால்,-ஏலம்?
>> Monday, March 31, 2008
முகலாய மன்னர் ஷாஜகானின்
இந்தியாவில் காதல் சின்னமாக திகழும் தாஜ்மஹால்,கட்டியவர் வாள் ஏலம்
ரூ.4 கோடி எதிர்பார்ப்பு தங்க கைப்பிடி வாள் லண்டனில் இன்று ஏலம்
லண்டன், மார்ச் 31-
முகலாய மன்னர்களில் பிரபலமானவரான ஷாஜகான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி கொண்ட வாள், லண்டனில் இன்று ஏலம் விடப்படுகிறது. அது ரூ.2.4 கோடி முதல் ரூ.4 கோடி வரை விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காதல் மனைவி மும்தாஜுக்காக தாஜ் மகாலைக் கட்டிச் சரித்திரத்தில் என்றும் இடம் பிடித்தவர் மன்னர் ஷாஜகான். கி.பி. 1629க்கு முன் அவர் எப்போதும் வைத்திருந்த வாளின் கைப்பிடி சுத்தத் தங்கத்தால் செய்யப்பட்டது.
அதில் தங்க அலங்காரங்களும், சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் கூரிய வாளில் ஷாஜகானின் அதிகாரப்பூர்வ மற்ற பெயர்கள், பிறந்த இடம், தேதி ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும். அதை தனது தனிப்பட்ட வாளாக மன்னர் எப்போதும் வைத்திருந்தார்.
பழங்கால ஆயுதங்கள் மற்றும் மண் பொருட்களைச் சேகரித்து பாதுகாப்பதுடன், ஆராய்ச்சியில் ஈடுபடும் ஜாக்கஸ் டெசன்பேன்ஸ் என்பவர் அந்த வாளை பாதுகாத்து வந்தார்.
அந்த வாள் லண்டனின் போன்ஹாம்ஸ் பகுதியில் இன்று ஏலம் விடப்படுகிறது. அது ரூ.2.4 கோடி முதல் ரூ.4 கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஏல நிறுவனம் தெரிவித்தது.
http://tm.dinakaran.co.in/firstpage.aspx#
0 கருத்துரைகள்:
Post a Comment