சமீபத்திய பதிவுகள்

திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்...திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய கட்டுரை

>> Tuesday, April 1, 2008

திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்...திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய கட்டுரை

திருக்குர்ஆன் இஸ்லாமியர்களின் புனித நூல். ஜிப்ரயீல் என்னும் வானவர் மூலமாக நபிமுகமதுவுக்கு கிபிஏழாம் நூற்றாண்டில் அரபு மொழியில் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறைச் செய்திகளின் தொகுப்பு என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை 23 ஆண்டுகளில் மக்காவிலும், மதிநாவிலும் அவ்வப்போது இந்த வசனங்கள் சொல்லப்பட்டன. இதுவே உலக முஸ்லிம்களின் உலகியல் மம் மறுமை வாழ்வுக்கான ஆதாரமாக கருதப்படுகிறது. இது 114 அத்யாயங்களையும், 6666 வசனங்களையும் அமைப்பாகக் கொண்டுள்ளன.

திருக்குர்ஆனை இரண்டுவிதமாக பு¡¢ந்து கொள்ள முயற்சிக்கலாம். ஒன்று வரலாறு சார்ந்து அறிவு ¡£தியாக அணுகுவது. மற்றொன்று மூடநம்பிக்கையோடு அணுகுவது. இது திருக்குர்ஆனை அணுகுவோரின் பார்வையும் வாசிப்பும் சம்பந்தப்பட்டது.

"திருக்குர்ஆன் தோன்றிய காலத்திலிருந்து ஒரு புள்ளிக்கூட மாறவில்லை" என்று தொடர்ந்து சொல்லிவருவது ஒரு அணுகுமுறைதான். ஏனெனில் நபிகள் நாயகத்திற்கு இறக்கப்பட்ட வசனங்கள் ஒலிவடிவிலானவை. பின்னரே எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டன. ஒலிவடிவம் / எழுத்து வடிவமாகும்போதே ஒரு மாற்றத்திற்குள்ளாகிறது என்பதே முதல் உண்மை. அரபு எழுத்து மரபில் ஸேரு, ஸபரு, பேஷ், ஷத்து, மத்து, நுக்தா உள்ளிட்ட உயிர்க் குறிகள் சார்ந்து இலக்கணமுறைமைகளும், வாக்கிய அமைப்பு, தொகுப்பு, தலைப்பிடுதல் உள்ளிட்டவை பிற்காலத்தில் இணைக்கப்பட்டவையாகும். ஏழாம் நூற்றாண்டுகால அல்லாவின் அரபு மொழியமைப்புக்கும் சமகால அரபு மொழிப் பயன்பாட்டிற்குமான இடைவெளியும் கவனிக்கத்தக்கது. அல்லாவின் அரபு மொழிப்பயன்பாடே முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் பண்பாட்டியல் நிகழ்வுகள் சார்ந்தும் அரபு மொழியின் அர்த்தங்கள் வேறுபடுகின்றன.

திருக்குர்ஆன் உருவான காலச்சூழல் இதில் முக்கியமாகும். தமிழ்மொழியின் முன்னோடி இலக்கியங்களில் ஒன்றான திருக்குறளின் காலம் கி.பி. 2ம் நூற்றாண்டு. திருக்குறள் 1330 பாக்களை கொண்டது. சமண சமய தாக்கமுள்ள திருவள்ளுவர் எழுதினார். இதற்கு ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருக்குர்ஆனின் 6,666 வசனங்களும் ஏறத்தாழ 23 வருடங்களாக நபிமுகமது வழியாக சொல்லித் தரப்பட்டன. திருக்குர்ஆன் தோன்றுவதற்கு முன்பான லட்சக்கணக்கான வருடங்களின் உலக வரலாறு, மனித தோற்ற வரலாறு பல்வேறு கலாச்சார சூழலில் முற்றிலும் வேறுபட்டே நிகழ்ந்துள்ளது.

திருக்குர்ஆன் வசனங்கள் அல்லாவால் ஜிப்ரயீல் அலைகிஸ்லாம் வழியாக நபி முகமதுவுக்கு அருளப்பட்டது என்பது முதல்கருத்து. அல்லாவின் அருள் நபிகள் நாயகத்தின் உள் மனத்து¦ண்டல் மூலமாக திருக்குர்ஆனாக வெளிப்பட்டுள்ளது என்பது இரண்டாவது கருத்து திருக்குர்ஆன் ¦ நபிமுகமதுவின் வார்த்தைகளாகும், ஹதீஸ்கள் நபிமுகமது பற்றிய பிற அறிஞர்களின் வாய்மொழி வரலாற்று தொகுப்பாகும் என்பது மூன்றாவது கருத்து. இவை பல்வேறுநிலைகளில் முன்வைக்கப்படும் விவாத உரையாடல்களாகும். திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகள்தான் என்பதற்கு திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பாத்திகாசூரா சுட்டிக்காட்டுகிறது.

அல்லாஹ் தன்னையே தான் ஒருபோதும் புகழ்வதாக சொல்வதில்லை. அல்பாத்திகா வசனங்கள் இவ்வாறாக அமையப்பெற்றுள்ளதால் அல்லாவை நோக்கியே நபிமுகமதுவின் பிரார்த்தனைகளாகவே இவை அர்த்தம் கொள்கின்றன.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! / (அவன்) அகிலங்கள் அனைத்தையும் படைத்து போஷித்து பா¢பக்குவப்படுத்துவோன் / அளவள்ள அருளாளன் நிகரற்ற அன்புடையோன் / தீர்ப்புநாளின் அதிபதி / உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் / நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக / எவர்களுக்கு நீ அருள் பு¡¢ந்தாயோ அவர்களுடைய வழியில் (நடத்துவாயாக)

(அவ்வழி உன்) கோபத்துக்குள்ளானவர்களுடையதும் அல்ல, வழி தவறியவர்களுடையதும் அல்ல.

உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் என்பதான வா¢கள் நபிமுகமதுவின் பிரார்த்தனை மக்கள் சார்ந்த கூற்றாகவும் குரலாகவும் வெளிப்பட்டுள்ளது.

இவ்வேளையில் திருக்குர்ஆனில் இடம்பெறும் "நபியே நீர் கூறும்" என்பதான சிலபகுதி வசனங்களை அல்லாவின் வார்த்தைகளாக சிலர் ஆதாரம் காண்பிக்க கூடும். ஆனால் இவ்வார்த்தைகள் நபிமுகமதுவின் உள்மனக் குரலாகவே வெளிப்பட்டுள்ளது. உள்மனம் வெளிமனத்தைப் பார்த்து கூற்றினை துவக்கி மக்களிடம் சொல்ல வேண்டிய கருத்துக்களை சொல்லிச் செல்கிறது.

மேலும் இவ்வசனங்கள் அனைத்தும் நபிமுகமது தான்வாழ்வில் எதிர்கொண்ட சிக்கலான, நெருக்கடியான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு¡¢ய தகுதிபடைத்த தீர்வுகளாகவே உருவாகியுள்ளன. எனவே திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகளென உறுதிப்பட கூறலாமென்ற கருத்தும் விவாதிக்கப்படுகிறது.

அராபியச் சூழலில் திருக்குர்ஆனின் வசனங்களைப்போலவே கவித்துவமிக்க கவிதை வா¢கள் வழக்கில் இருந்தன.

நபிமுகமதுவின் பிறப்புக்கு முந்திய காலத்தில் அரபு மக்கள் மத்தியில் மிகப் புகழுடன் வாழ்ந்த இம்ரூல் கயஸ் (Imru Qays) முக்கியமானவர். அதுபோல் நபிமுகமதுவினோடு நேரடி தொடர்புள்ள அரசுக் கவிஞர்போல் அங்கீகா¢க்கப்பட்ட ஹசன் பி.தாபித் மற்றுமொரு முக்கிய கவிஞராவார். நபிமுகமதுவின் ஆட்சியதிகாரத்தின் கீழ் க·பா வருவதற்கு முன்பு க·பாவில் சில முக்கியமான கவிஞர்களின் கவிதைகள் பொறிக்கப்பட்டிருந்தன. சுகைர், இம்ருல்கயஸ், அம்ரு இபின் குல்சாம், அல்ஹ"¢ஸ், டிராபா, அன்தரா மற்றும் லாபிட் ஆகியே"¢ன் கவிதைகளாக இவை இருந்தன. இவற்றை முஅல்லகாத் என்று வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அல்ஜில்ஜில் (99), அல்அஸ்ர் (103). அல் ஆதியாத் (100), அல்பாத்திகா (1) திருக்குர்ஆன் வசனங்களுக்கும், முஅல்லகாத் வசனங்களுக்கும் ஒப்பீடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற நபிமுகமதுவின் காலத்திற்கு முன்னே சி¡¢ய பகுதிகளில் வாழ்ந்திருந்த ஸாபியீன்களின் கலாச்சாரத்தையும் இஸ்லாம் உள்வாங்கிக் கொண்டுள்ளது. சூ¡¢யன் மறைவு இரவின் துவக்கத்திலிருநூது மறுநாள் சூ¡¢யன் உதிக்கும் வரை முப்பது நாட்கள் நோன்பிருக்கும் பழக்கமும், ஒரு நாளைக்கு ஏழு தடவை தொழுகை வணக்கமும் இதில் முஸ்லிம்கள் பிற்காலத்தில் பேணி ஐந்து நேர தொழுகைகளான அதே காலத்தையும் உள்ளடக்கியதையும் இங்கே குறியிட்டுச் சொல்லலாம்.

நபிமுகமதுவின் வார்த்தைகளாக வெளிப்பட்ட திருக்குர்ஆன் அரபு சமூக பல்வேறு பண்பாட்டு சமூக, சமய வாழ்வியல் நெருக்கடிகளுக்கிடையே வழிகாட்டுதலுக்காக இவ்வசனங்கள் சொல்லப்பட்டன.

நபிமுகமதுவின் காலத்தில் இவ்வகை வடிவத்தில் திருக்குர்ஆன் தொகுக்கப்படவில்லை. இமாம் அபூபக்கா¢ன் காலத்தில் இம்முயற்சி துவங்கி சைதுஇப்துதாபித் என்ற குர்ஆன் தலைமை எழுத்தாளா¢ன் முன்முயற்சியில் மனனம் செய்யப்பட்ட நபித்தோழர்களின் வசனங்கள் அவர்களின் முன்னிலையிலேயே உறுதி செய்யப்பட்டு தொகுக்கப்பட்டு முதல் கலீ·பா அபூபக்கர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்தம் மரணத்திற்கு பிறகு மகளாரும் நபிமுகமதுவின் மனைவியுமான ஹப்சாவிடம் இப்பிரதி பாதுகாக்கப்பட்டு வந்தது. இரண்டாம் கலீபா உமா¢ன் ஆட்சிக்குப்பிறகு மூன்றாம் கலிபா உதுமானின் காலத்தில் இஸ்லாம் பரவிய பல்லாண்டுகளிலும், அராபிய பகுதிகளிலும், பல்வேறு மொழி வழக்குகளை உடைய மக்கள் திருக்குர்ஆனை பயன்படுத்தியபோது அதனை ஒழுங்கமைக்கும் நோக்கத்துடன் சில நடவடிக்கைகளை கலீபா உதுமான் மேற்கொண்டார்.

குர்ஆனை முறைப்படுத்தி பாதுகாக்கவும் திருப்பி எழுதி பிரதிகள் எடுக்கவும் நான்கு பேர் கொண்ட ஒரு குழுவினை அமைத்தார். இதில் சைதுஇப்னுதாபித் தலைமை குர்ஆன் எழுத்தாளராக செயல்பட்டார். இதரர்களாக அப்துல்லாஹ் இப்னு ஜுபைர், ஸயீத் இப்னுல் ஆஸ், அப்துல் ரகுமான், இப்னு ஹிஸ், இப்னு ஹாஸாம், ஆகியோர் செயல்பட்டனர். அன்னை ஹப்சாவிடம் பாதுகாக்கப்பட்டிருந்த திருக்குர்ஆன் பிரதியை அடிப்படையாகக் கொண்டு இப்பணி நடைமுறைப்படுத்தப்பட்டது பல்வேறு பகுதி மக்களிடம் பழக்கத்திலிருந்த குர்ஆன் பிரதிகளும் இப்பணியில் தொகுக்கப்பட்டன.

திருக்குர்ஆனை எப்படி பொருள் கொள்வது என்ற சிக்கலில்தான் சுன்னத்துல் ஜமாஅத்தினர் தா£காவினர், சூபிகள், வகாபிகள், ஜமாஅத்தே இஸ்லாம், குதுபிகள், காதியானிகள், அஹ்லே குர்ஆன்கள் என இயக்கங்களும் குழுக்களும் உருவாக தங்களுக்கேற்ற விதத்திலும் வெவ்வேறு விதமான பொருள் சொல்கின்றனர். இதனால்தான் இத்தனை குழுக்கள், இயக்கங்கள் உருவாகியுள்ளன.

ஒரே குர்ஆன் - அர்த்தப்படுத்துதல்களின் வழியாக ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு குர்ஆனாக உருமாறியுள்ளது.

மூலப்பிரதியிலிருந்து அர்த்தத்தின் வழி உருவான இந்த துணைப்பிரதிகள் (sub-Text) பல குர்ஆன்களாகவே நடைமுறையில் நுண்ணிய அளவில் செயல்படுகின்றன.

இந்த பின்னணிகளை குறைந்த பட்சம் பு¡¢ந்து கொள்ள வேண்டும். இதுவே திருக்குர்ஆனை அணுகுவதற்கு ஒரு புதுக்கண்ணோட்டத்தை வழங்கும். மாறாக திருக்குர்ஆன் வசனங்களை எந்திர கதியில் வெறுமனே நீட்டி மூழ்கி மேற்கோள் காட்டுவதால் எந்த பலனும் இல்லை.

இவ்விவாதங்களை முன்வைப்பது திருக்குர்ஆனின் மா¢யாதையையும் அதன் உள்ளார்ந்த ஆற்றலையும் சுயத்தையும் பங்கப்படுத்துவதற்கல்ல. மாறாக

திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த சில கற்பிதங்களை கட்டுடைக்கும் போதுதான் அதன்மீது கட்டி எழுப்பப்பட்டிருக்கின்ற அடிப்படைவாதம், தீவிரவாதமும், தகர்க்கப்படும்.

திருக்குர்ஆனின் யதார்த்தமான அறவியல் கோட்பாடுகளை வாழ்வியல் வழிகாட்டலுக்காக தேவைக்கேற்றவாறு முன்வைத்துக் கொள்ளலாம். இதுவே இந்த விவாதங்களின் முக்கிய நோக்கமாகும்.

 

http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_13.html

 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP