சமீபத்திய பதிவுகள்

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை:மந்திரவாதி உள்பட 3 பேர் கைது:பில்லி-சூனியம் வைத்து துன்புறுத்தியது அம்பலம்

>> Saturday, May 3, 2008நாகர்கோவில், மே.3-

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த வழக்கில் மந்திரவாதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை

கருங்கல் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தொலையாவட்டம் கம்பிளார் பகுதியைச் சேர்ந்தவர் செறு மணி (வயது 55). இவர் பாறை உடைக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பேபி சரோஜா (50) அருகில் உள்ள முந்திரி ஆலையில் வேலைபார்த்து வந்தார். செறுமணியின் மூத்தமகள் ஜெஸ்லின் உஷாவுக்கு கடந்த 11/2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

செறுமணி கடந்த 29-ந்தேதி தன் மனைவி பேபி சரோஜா, மகள்கள் ஜெஸ்லின் நிஷா (21), ஜெஸ்லின் ஆயிஷா (18) ஆகியோருடன் விஷப்பொடி சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மந்திரவாதி

இந்நிலையில் இறந்த பேபி சரோஜா தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை அவருடைய மூத்த மகள் ஜெஸ்லின் உஷா கைப்பற்றி போலீசில் ஒப்படைத்தார். அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாவது:-

எங்கள் வீட்டின் அருகில் வேதநாயகம் மகன் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரிய மந்திரவாதி. இவருடைய மந்திர தொல்லையை எங்களால் தாங்க முடியவில்லை. அய்யப்பனின் பில்லி-சூனியத்தால் ஒவ்வொரு நாளும் நாங்கள் செத்து பிழைத்துக்கொண்டு இருந்தோம்.

நோய் தீர அப்பாவி மக்களிடம் கடன் வாங்கினோம். மந்திரவாதி அய்யப்பன் எங்களை வாழ விடமாட்டான் என்பதால் தற்கொலை செய்கிறோம். இந்த மரணத்துக்கு காரணம் அய்யப்பனும், அவருடைய மனைவி பேபியும் தான்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்த கடிதம் கிடைத்தவுடன் போலீசார் மீண்டும் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, செறுமணி சுமார் 10 ஆண்டுக்கு முன்பு வீடு கட்ட பலரிடம் கடன் வாங்கியதும், இந்த பணத்தை அவர் திருப்பி செலுத்த முடியாமல் வறுமையில் வாடி வந்ததும் தெரியவந்தது.

வெடி வெடித்து காயம்

மேலும் 21/2 ஆண்டுகளுக்கு முன்பு தனது 2-வது மகளுக்கு கை, கால் செயலிழந்ததால் அவர் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி செலவு செய்து சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதற்கிடையே அவர் பாறை உடைக்கும் தொழில் செய்த போது பாறை வெடி வெடித்து காயம் அடைந்து பல நாட்கள் சிகிச்சை பெற்றார். இதில் பல ஆயிரம் ரூபாய் செலவானது.

மேலும் பேபி சரோஜா அடிக்கடி நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அவரது கடைசி மகள் ஜெஸ்லின் ஆயிஷா போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தார். இந்த வேலைக்கும் தடை ஏற்பட்டதாக தெரிகிறது.

பரிகாரம்

இந்த தொடர் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க செறுமணியின் குடும்பத்தினர் மந்திரவாதி அய்யப்பனின் தம்பி குருநாதனை நாடி அவர் மூலம் பல ஆயிரம் செலவு செய்து பரிகாரம் செய்தனர். இருப்பினும் அய்யப்பனின் மந்திரவாதம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் செறுமணியின் வீட்டை சுற்றி அடிக்கடி முட்டைகளும், கோழி ரத்தமும் காணப்பட்டதால் அவர் மேலும் பயம் அடைந்தார்.

இது தவிர பக்கத்து வீட்டை சேர்ந்த ராணி என்ற பெண், பேபி சரோஜாவுக்கு ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் ஒரு தங்க வளையலை கடனாக கொடுத்துள்ளார். ராணி கடந்த 29-ந்தேதி காலையில் பணத்தையும், வளையலையும் சரோஜாவிடம் கேட்டு மனம் வருந்தும்படி பேசியதாக தெரிகிறது.

இந்த தொடர் தொல்லைகளால் செறுமணி தனது குடும்பத்துடன் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

கைது

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்ய காரணமாக இருந்ததாக கூறப்படும் மந்திரவாதி அய்யப்பன் (47), இவருடைய மனைவி பேபி (32), மற்றும் கடன் கொடுத்த ராணி (34) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP