சமீபத்திய பதிவுகள்

பிளாஷ் டிரைவில் அப்ளிகேஷன் புரோகிராம்கள்

>> Monday, November 16, 2009

 
 

எளிதான டேட்டா பரிமாற்றத்திற்கு உதவியபிளாஷ் டிரைவ்கள், தற்போது மேலும் பல பயன்களைத் தரும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சில அப்ளிகேஷன் புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடாமல் பயன்படுத்த இந்த பிளாஷ் டிரைவ்கள் பயன்படுகின்றன. 


பிளாஷ் டிரைவ்களில் காப்பி செய்து அப்படியே கம்ப்யூட்டரில் செருகிப் பயன்படுத்த ஆங்காங்கே இணையத்தில் கிடைக்கும் புரோகிராம்கள் குறித்து சில தகவல்கள் ஏற்கனவே இந்த பக்கங்களில் தரப்பட்டுள்ளன. ஆனால் அண்மையில் ஓர் இணைய தளம் இத்தகைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் பலவற்றை வகை வகையாய் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த இணைய தளத்தின் முகவரி: http://portableapps.com/appsஇங்கே நூற்றுக் கணக்கில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று அப்படியே வைத்துப் பயன்படுத்தக் கூடிய தன்மை உடையவை என்பது இவற்றின் சிறப்பு. இவை அனைத்தும் கீழே குறிப்பிடப்படும் தலைப்புகளில் குழுக்களாக அமைத்துத் தரப்பட்டுள்ளன. அவை:  Accessibility, Development Education Games Graphics & Pictures Internet Music & Video Office Operating Systems, Utilities.இவற்றை பிளாஷ் டிரைவில் பதிய முதலில் பிளாஷ் டிரைவினைக் கம்ப்யூட்டரில் இணைக்க வேண்டும். பின் இந்த புரோகிராம் மீது கிளிக் செய்தால்,எங்கு இன்ஸ்டால் செய்திட என்ற கேள்வி கேட்கப்படும். அப்போது பிளாஷ் டிரைவின் டிரைவைக் கிளிக் செய்தால், பிளாஷ் டிரைவில் அந்த புரோகிராம் பதியப்படும். பின் அதனை எடுத்துச் சென்று, கம்ப்யூட்டரில் இணைத்து நேரடியாகப் பயன்படுத்தலாம். புரோகிராமினை கம்ப்யூட்டருக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.இணையப் பக்க அச்சில் உங்கள் பெயர்
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இணைய தளங்களில் பிரவுஸ் செய்திடும் பக்கங்களை அப்படியே அச்சுக்கு அனுப்புகிறீர்களா! அப்படியானால் அதில் உங்கள் பெயர், நீங்கள் விரும்பும் தலைப்பு ஆகியவற்றையும் அச்சிடலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, தானாகவே சில விஷயங்களைத் தலைப்பில் அச்சிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஹெடரில் பக்கத்தின் தலைப்பு மற்றும் பக்க எண் / மொத்த பக்க எண் ஆகியவை அச்சிடப்படும். புட்டரில் இணைய தள முகவரி மற்றும் சுருக்கமாக தேதியும் அச்சிடப்படும். இது போல மாறா நிலையில் உள்ளதை மாற்றி நாம் நம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தலாம். ஏனென்றால் நாம் அதிக பக்கங்களை அச்சிடுவதாக இருந்தால் கூடுதலான சில தகவல்களை அவற்றில் சேர்க்க விரும்பலாம். எடுத்துக் காட்டாக நெட்வொர்க் பிரிண்டர் என்றால் உங்களுக்கான பக்கங்களில் உங்கள் பெயர் இணைக்க விரும்பலாம். அப்போதுதான் மற்றவர்களும் அச்சுக் கொடுக்கும் வேளையில் உங்கள் பக்கங்களைத் தனியே பிரித்து எடுக்க வசதியாக இருக்கும். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செட் செய்திடவும். 
1. பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸ் செல்லவும். மெனு பாரில் பைல் மற்றும் பேஜ் செட் அப் என இதனைப் பெறலாம். கமாண்ட் பார் கிடைத்தால், பிரிண்டர் பட்டனை அழுத்தி அதில் பேஜ் செட் அப் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டும் கிடைக்கவில்லை என்றால், Alt+F  அழுத்திப் பின் க் அழுத்தவும்.
2. பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸ் உங்களுக்கு இப்போது கிடைக்கும். இதில் ஹெடர்ஸ் அன்ட் புட்டர்ஸ் என்ற பிரிவில் இரண்டு பிரிவுகள் இருப்பதைக் காணலாம். அவை ஹெடர் மற்றும் புட்டர். இவை ஒவ்வொன்றிலும் முதலில் விரிக்கையில் இடது பக்கம் என்ன டெக்ஸ்ட் அச்சாகும் என்பது காட்டப்படும். இரண்டாவதாக விரிக்கையில் நடுவில் அச்சாவதும், மூன்றாவதாக விரிக்கையில் வலது பக்கம் அச்சாவதும் காட்டப்படும். இவற்றில் நாம் தேர்ந்தெடுக்க ஆப்ஷன்களாகக் கீழ்க்கண்டவை காட்டப்படும். Title* URL* Page number* Page # of total pages* Total Pages* Date in short format* Date in long format* Time* Time in 24hr format* Customஇவற்றில் நீங்கள் "Custom" என்பதைத் தேர்ந்தெடுத்தால், இதில் அச்சாக விரும்பும் எந்த டெக்ஸ்ட்டையும் இதில் தரலாம். இதில் உங்கள் பெயர் அல்லது முகவரியையும் இணைக்கலாம்.Customஹெடர் மற்றும் புட்டரில் பக்க தலைப்பு, தேதி, நேரம் போன்றவற்றையும் கீழ்க்காணும் வழிகளில் இணைக்கலாம். 
&w: Title&u: URL&p: Page numberPage &p of &P: Page number of total pages&P: Total Pages&d: Date in short format&D: Date in long format&t: Time&T: Time in 24hr format&&: Single ampersandஎடுத்துக் காட்டாக "முருகேசன் -தீ" என டைப் செய்தால் முருகேசன் என அச்சிடப்பட்டு அதன்பின் அந்த பக்கத் தலைப்பு அச்சாகும். 
இந்த டயலாக் பாக்ஸில் தேவைப்பட்டவை எல்லாம் மாற்றிவிட்டு பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடிவிடவும்.வேர்ட் ஷார்ட் கட் கீகள்
டாகுமெண்ட் உருவாக்குதல், பார்த்தல், பதித்தல்
CTRL+N: புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க
CTRL+Oஏற்கனவே உள்ள டாகுமெண்ட் டைத் திறக்க
CTRL+W : டாகுமெண்ட் ஒன்றை மூடிட
ALT+CTRL+S:  டாகுமெண்ட் விண்டோவை இரண்டாக்க
ALT+SHIFT+C: டாகுமெண்ட் விண்டோ பிரித்ததை மீண்டும் ஒன்றாக்க
CTRL+S:  டாகுமெண்ட்டை சேவ் செய்திட
ALT+F4:  வேர்ட் புரோகிராமில் இருந்து வெளியேற
சொல் தேடி செயல் மேற்கொள்ள
CTRL+F : டெக்ஸ்ட்டில் குறிப்பிட்ட சொல்லை அல்லது மற்றவற்றைத் தேடி அறிய
ALT+CTRL+Y : பைண்ட் விண்டோவை மூடிய பின்னர் பைண்ட் அண்டு ரிபிளேஸ் விண்டோவைச் செயலுக்குக் கொண்டுவர
CTRL+H : நீக்கிய டெக்ஸ்ட் மற்றும் சார்ந்த ஐட்டங்களை மீண்டும் அதே இடத்தில் வைத்திட 
CTRL+G: குறிப்பிட்ட புக்மார்க், பக்கம், புட் நோட், டேபிள், கமெண்ட், கிராபிக் ஆகியன இருக்கும் இடத்திற்குச் செல்ல 
ALT+CTRL+Z: டாகுமெண்ட் மற்றும் டாகுமெண்ட்டின் ஒரு பிரிவுக்கு மாறி மாறிச் செல்ல
ALT+CTRL+HOME: தேர்ந்தெடுத்த தேடல் வகைப்படி செல்ல
செயல்களை ரத்து செய்திட, நீக்கிட, மீண்டும் கொண்டு வர
ESC :  ஒரு செயல்பாட்டினை ரத்து செய்து நிறுத்திட
CTRL+Z: மேற்கொண்ட செயல்பாட்டை அப்படியே பழைய நிலைக்கு மாற்ற 
CTRL+Y: மேற்கொண்ட ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்திட
வியூ மாற்ற
ALT+CTRL+P பிரிண்ட் லே அவுட் வியூ 
ALT+CTRL+O: அவுட்லைன் வியூ 
ALT+CTRL+N  நார்மல் வியூ 
ALT+R:  ரீடிங் வியூ
அட்டவணையில் ஊர்வலம்
TAB: ஒரு வரிசையில் அடுத்த செல்லுக்குச் செல்ல
SHIFT+TAB:  ஒரு வரிசையில் முந்தைய செல்லுக்குச் செல்ல
ALT+HOME:  படுக்கை வரிச

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

2 கருத்துரைகள்:

முனைவர் இரா.குணசீலன் November 16, 2009 at 7:57 PM  

பயனுள்ள செய்தி..

தெய்வமகன் November 16, 2009 at 9:13 PM  

நன்றி நல்வரவு

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP