சமீபத்திய பதிவுகள்

அழகில்லையா? கெட்-அவுட் டேட்டிங் வெப்சைட் தடா

>> Monday, November 16, 2009


 
 

Top global news update 

கோபன்ஹேகன்:"டேட்டிங்' செல்லப் போகிறீர்களா? அப்படியானால் முதலில் உங்கள் புகைப்படத்தை அனுப்புங்கள். அழகாக இருந்தால் அனுமதி. அழகில்லை என்றால் "கெட் அவுட்' இப்படியொரு வெப்சைட் விளம்பரப்படுத்தியுள்ளது.டேட்டிங் என்பது தனக்குப் பிடித்த பிறரிடம் தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆரம்பித்து, ஷாப்பிங், ஓட்டல், சுற்றுலா என்றெல்லாம் சுற்றிக் கடைசியில் வேறெங்கோ போய் முடிவது நமக்குத் தெரிந்ததுதான். மேற்கத்திய கலாசாரம், இப்போது நம்மவர்களையும் பீடித்துள்ளது.இந்த டேட்டிங் குக்கு அழகானவர்கள் மட்டுமே தங்கள் புகைப்படங்களை அனுப் பிப் பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னால் எப்படியிருக்கும்? ஆம், டென்மார்க்கில் தான் இப்படியொரு வெப்சைட்டை ஆரம்பித்துள்ளனர்.அந்த வெப்சைட்டில் இணைபவர்கள், உலகளாவிய அளவில் தங்கள் "நண்பர்களோடு' அளவளாவி, தங்கள் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.இதில் பல மொழி வசதி, சுற்றுலாத் தகவல்கள், நவீன வீடியோ தொடர்பு போன்ற பல வசதிகள் உள்ளன.அதோடு, "கவர்ச்சியானவர்கள், உலகளாவிய தொடர்பு, உறுதியான ஒப்பந்தம், தலைசிறந்த மாடலிங் நிறுவனங்களின் தொடர்பு' என்றெல்லாம் விளம்பரப்படுத்தியுள்ள அந்த வெப்சைட், கடைசியாக, "அழகில்லாதவர்கள் தயவு செய்து அணுக வேண்டாம்' என்றும் தெரிவித்துள்ளது.இதில் பதிவு செய்பவர்களில் 20 சதவீதம்தான் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.புறக்கணிக்கப்படுபவர்கள் வெறுத்துப் போய், வெப்சைட்டை நிறுவிய டேட்டிங் ஏஜென்சிக்கு கொலை மிரட்டல் விடுமளவுக்கு வெப்சைட் பிரபலமாகியுள்ளது.இதன் நிறுவனர் ராபர்ட் ஹின்ட்சே கூறுகையில், " தன்னை ஈர்ப்பவர்களோடு நெருக்கமாக இருப்பதை ஒவ்வொருவரும் விரும்புவர். அதுதான் "பியூட்டிபுல்பீப்பிள்.காம்' மின் கொள்கை. ஏனெனில் அழகை விரும்புவது இயற்கைதானே' என கூலாக சொல்கிறார். இப்போது இந்த வெப்சைட் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பரவிவிட்டது


source:dinamalar


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP