சமீபத்திய பதிவுகள்

ஈழம் - தமிழ் திரையுலகினர் ஆவேசம்

>> Monday, November 16, 2009
மிழ் திரையுலகினர் ஈழத்திற்காக ஆவேசமாக, ஆத்திரமாக, வேதனையாக தங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

  இந்தப்பதிவுகள் 
'ஈழம்-மௌணத்தின் வலி'என்று தனிப்புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், நடிகர் சத்யராஜ், நடிகர் சூர்யா, நடிகர் பிரகாஷ்ராஜ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர்கள் பாலா,அமீர், சேரன், லிங்குசாமி, மிஸ்கின்,ஏ.ஆர்.முருகாதாஸ், கே.வி.ஆனந்த், பாலாஜிசக்திவேல், கவிஞர்கள் வைரமுத்து, அப்துல்ரகுமான்,இன்குலாப், பா.விஜய்.தாமரை, தமிழச்சி, கபிலன், நா.முத்துக்குமார், அறிவுமதி, மு.மேத்தா முதலானோர் தங்களது ஈழ உணர்வுகளை பதிவு செய்துள்ளனர்.

நேற்று சென்னையில் நடந்த இப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு நடிகர்கள் சூர்யா, பிரகாஷ்ராஜ், சிவக்குமார், இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், மிஸ்கின் ஆகியோர் பங்கேற்றனர்.

நடிகர் பிரகாஷ்ராஜ்,  ''ஒரு மானை வேட்டையாடினால் தண்டிக்க சட்டம் இருக்கிறது. போராட அமைப்பும் இருக்கிறது. ஆனால் மனிதர்களை வேட்டையாடி கொல்கிறார்களே இதை தடுக்க சட்டம் இல்லையா? பெரியவர்களை கொல்ல காரணம் பல சொல்லலாம்.
 
ஆனால் குழந்தைகளை கொல்ல காரணம் சொல்ல முடியுமா? இதை இப்படியே விட்டு விட முடியாது'' என்று 
பேசினார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்,  ''கற்பனைக்கும் எட்டாத சிந்திக்க முடியாத ஒரு கொடூரம் என்பதை கேள்விபட்டிருந்தாலும் கூட, இந்த புத்தகதில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது, ஒரு காட்டுமிராண்டி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது.

 ஏன் என்றால் இதில் நிறைய விஷயங்கள் நமக்கு தெரியவே இல்லை. நம்ம அறிவுக்கு இதுவெல்லாம் வரவே இல்லை என்று நினைக்கும்போது யாரோட தப்பு. ஏன் இவ்வளவு தகவல் தொழில் நுட்பத்தில் பயங்கரமாக இருக்கிறோம். 

வானத்தை எட்டி விட்டோம் என்று சொல்கிறோம். அனால் இதுவெல்லாம் நமக்கு தெரியவே இல்லை என்று சொல்லும் போது வெட்கமாக இருக்கிறது. 

ஒரு நார்த் இண்டியாவில் போய் இதையெல்லாம் சொன்னால் 'ய தி ஸ்ரீலங்கா பிராபலம்' என சாதாரணமாக கேட்பார்கள். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டால், நிதி திரட்டுவதில் தமிழன் தான் முதல் இடத்தில் இருக்கணும். கார்கில் வார் நடந்தது என்றால் நிதி திரட்ட தமிழன்தான் முதல் இடத்தில் நிற்கணும். ஆனால் ஒரு இனம் அழிவது உங்க அறிவுக்கே வராதா? 

உங்களுக்கு அப்படி ஒன்று நடப்பதே தெரியாதா? யார் தப்பு இது. அரசியல் ஈகோவா? மதமா? இல்ல பழிவாங்கலா? எனக்கு தெரியல.

செயற்கைக்கோளில் இருந்து பார்க்கும்போது மரத்தில் உட்காந்திருப்பது குருவியா, காக்காவா என பார்க்கக்கூடிய அறிவியல், முகாம்களில் எத்தனை பேர் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பதியவே இல்லையா? தமிழனை பார்த்தவுடனேயே அந்த கேமரா திரும்பிடுச்சா? போர் குற்றம் நடக்கிறது என்று ஐ.நா. சோதனை செய்ய வரும்போது, ஒரே நாளில் கிட்டதட்ட 50 ஆயிரம் தமிழர்கள் புல்டவுசரால் நசுக்கப்பட்டிருக்கிறார்கள். 

எல்லாமே ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள். ஏன் என்றால் அவர்கள் அடையாளத்தை மறைக்கிறார்கள். பேசினால்தான் தமிழன். தமிழ் பேசும்போது தமிழனாகிறான். தமிழ் பேசும்போது கொலை செய்கிறார்கள். 

ஆனால் பேசாத 
குழந்தை. குழந்தைக்கு இன்னும் மொழியே தெரியாது. அந்த குழந்தை என்ன பாவம் செய்தது. அப்பாவி குழந்தைகளை கொலை செய்திருக்கிறார்கள். 

பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படைக் கூட ஒரு கொள்கை வைத்திருக்கிறார்கள். அதாவது குழந்தைகள், பெண்களை கொலை செய்ய மாட்டோம் என்று. கூலிப்படைக்கு இருக்கிற ஒரு கட்டுப்பாடு கூட ஒரு ராணுவத்துக்கு கிடையாது. 

அணுகுண்டுக்கும், புத்தகத்துக்கும் ஒரே வித்தியாசம்தான். அணுகுண்டு வீசும்போதெல்லாம் வெடிக்கும், புத்தகம் 
படிக்கும்போதெல்லாம் வெடிக்கும். இந்தப் புத்தகம் அந்த மாதிரியான புத்தகமாக இருக்க வேண்டும். 

அமெரிக்காவுக்கம் வியட்நாமுக்கும் நடந்த போரை தடுத்து நிறுத்தது ஒரே ஒரு புகைப்படம் தான். ஒரு சிறுமியின் நிர்வாணமாக நடந்து வருவதுபோல் உள்ள புகைப்படம்தான். இங்கு அதைவிட கொடூரமான புகைப்படங்கள் இருக்கின்றன. இந்தப்புகைப்படத்திற்கு இந்த உலகம் என்ன பதில் சொல்லப்போகிறது. 

அப்பாவித் தமிழர்கள் எல்லாம் சாகும்போது, போர்க்குற்றம் என்றால், அதைப் பார்த்து வாய் மூடி, கண் மூடி இருப்பது வரலாற்றுக் குற்றம்.

தரையில் முட்டி அழ வேண்டும் போல் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையின்மையால் தான் நாம் அழிந்து கொண்டு வருகிறோம். இனியாவது நாம் ஒற்றுமையாக இருந்து இந்த கொடுமைகளை தடுக்க வேண்டும்'' ''என்று பேசினார்.

நடிகர் சிவக்குமார் இப்புத்தகத்தில் உள்ள உணர்வுகளை சிலவற்றை மேடையில் படித்தார்.

திரையுலகினரை தவிர பத்திரிக்கையாளர் நக்கீரன்கோபால், சத்குரு ஜக்கிவாசுதேவ் முதலானோர்களும் இவ்விழாவில் பங்கேற்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.

-வடபழனிவாலு


source:nakkheeran

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP