சமீபத்திய பதிவுகள்

பசிக்கு மதம் உணவாகாது: சுவாமி விவேகானந்தர்!

>> Friday, April 4, 2008

விவேகாநந்தரே இந்தியாவில் பசியால் வாடுபவர்களுக்கு சாப்படு கொடுங்கள் என்று சொல்லியுள்ளார்.ஆனால் இன்றைய இந்து மதவாதிகள் கிறிஸ்தவர்கள் அரிசி கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்.
 
விவேகானந்தர் இயேசு கிறிஸ்துவை கடவுளாகவே ஏற்றுக்கொண்டார்.இயேசுவின் வழியில் நடக்காத கிறிஸ்தவர்களையே அவர் எதிர்த்தார்.இதை அவருடைய புத்தகங்களில் இருந்து நாம் வாசிக்கலாம்.
 
 
நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்துவதும் இயேசு கிறிஸ்துவைத்தான்.கிறிஸ்தவ மதத்தை அல்ல
vivkananda
webdunia photo WD
நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, மதப் பிரச்சாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயல்வதில்லை? கடுமையான பஞ்சங்களின்போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.

இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அல்ல. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டைவற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத்தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களிடம் மதப் பிரச்சாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்குத் தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.

இந்தியாவில் பணத்திற்காக மதப் பிரச்சாரம் செய்பவனை ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித் துப்புவார்கள். வறுமையில் வாடுகின்ற எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்கு வந்தேன். கிறிஸ்தவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து, பிற மதத்தினருக்காக உதவி கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை நன்றாக உணர்ந்துவிட்டேன்.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP