முன்னோருக்கு மரியாதை!
>> Friday, April 4, 2008
ஹாங்காங்: ஹாங்காங்கில் இருக்கும் நவீன கல்லறை இது. அங்கு ஏராளமானோர் சென்று கல்லறைகளில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
ஹாங்காங்கில் நேற்று சிங் மிங் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் முக்கிய அம்சம் மூதாதையர்களுக்கு மரியாதை செய்வதுதான்.
இந்த சமயத்தில் தங்கள் பாட்டன், முப்பாட்டன் சமாதிகளுக்கு சென்று அதை சுத்தப்படுத்துகின்றனர். பிறகு உணவு போன்றவற்றை சமாதியில் வைக்கின்றனர். இந்த நாள் அங்கு அரசு விடுமுறையாக அறிவிக்கப்படுவது வழக்கம்.
0 கருத்துரைகள்:
Post a Comment